விஷாலின் சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - இது குறித்து நடிகர் விஷால் வெளியிட்ட அறிக்கை இதோ..
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் M.S.அமுதன் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள திரைப்படம் சக்ரா. இப்படத்தை வெளியிட சமீபத்தில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இப்படத்தின் வழக்கில் சக்ரா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டால் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்லாமல், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.
மேலும் தற்போது நடிகர் விஷால் உண்மையே வெல்லும் என சக்ரா படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
All Clear for #Chakra -
— Vishal (@VishalKOfficial) February 18, 2021
Grand Worldwide Release Tomorrow #ChakraFromTomorrow#ChakraKaRakshak#VishalChakra pic.twitter.com/eWxJKrwJ8y