The Batman திரைவிமர்சனம்
உலகம் முழுவதிலும் உள்ள அனைவருக்கும் பிடித்த ஒரு பிரபலமான கதாபாத்திரம் பேட்மேன். காமிக், கார்ட்டூன், திரைப்படம், கேம் என பேட்மேன் குறித்து எந்தஒரு விஷயம் வெளியானாலும் அதை பார்க்க கூடிய மாபெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அதன்படி தற்போது இயக்குனர் Matt Reeves இயக்கத்தில் நடிகர் Robert Pattinson நடிப்பில் புதிய வேர்ஷனில் வெளியாகியுள்ள The Batman திரைப்படம் இப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
பட தொடக்கத்திலே Bruce Wayne-னின் வாய்ஸ் ஓவரில் தான் இரண்டு வருடங்களாக பேட்மேன்-ஆக இருந்து வருவதாகவும், Gotham City-ல் இரவில் நடக்கும் குற்றங்களையும் தடுத்து நிறுத்தும் ஒரு காவலாளியாக இருப்பதாகவும் ரசிகர்களுக்கு மாஸ் எண்ட்ரி கொடுக்கிறார் The Batman.
அதேசமயம் நகரத்தில் ஊழல் செய்து வரும் பெரிய அதிகாரிகளை தொடர்ந்து கொலை செய்து பெரிய Serial Killer-ஆக வருகிறார் The Riddler. கொடூரமாக கொலை செய்வது மட்டுமின்றி Riddler உடல்கள் மற்றும் பேட்மேனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே துப்பு துலக்க விட்டு செல்கிறார்.
பின்னர் Gotham City-ன் போலீஸ் அதிகாரியான James Gordon உடன் இணைந்து பேட்மேன் Riddler செய்து வரும் கொலைகளை புலனாய்வு செய்ய தொடங்குகின்றனர். இதில் Penguin, Catwoman உள்ளிட்ட கதாபாத்திரங்கள் பேட்மேன் Riddler-யை நெருங்க காரணமாக அமைக்கின்றனர்.
அதன்பிறகு சைக்கோ கொலைகாரனாக வரும் Riddler-யை பேட்மேன் எப்படி பிடிக்கிறார், Gotham City-ல் Riddler செய்துள்ள பெரிய அசம்பாவிதங்களில் இருந்து மக்களை பேட்மேன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
Christian Bale, Ben Affleck உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து புதிய பேட்மேன்-ஆக வந்துள்ள Robert Pattinson பேட்மேனாகவும் Bruce Wayne-ஆகவும் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். பேட்மேனாக ஆக்ஷன் காட்சிகளிலும், Batmobile, Batline உள்ளிட்ட Gadgets-களை பயன்படுத்துவதிலும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார் Robert Pattinson.
Zoë Kravitz (Catwomen) , Colin Farrell (Penguin), Jeffrey Wright (Jim Gordon) உள்ளிட்டோர் அவர்களின் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளதால் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக பார்க்க அப்பாவி போல் இருந்து கொண்டு கொடூர கொலைகளை செய்து வரும் Riddler கதாபாத்திரத்தில் Paul Dano-வின் நடிப்பு சூப்பர்.
மேலும் இயக்குனர் Matt Reeves தனது The Batman படத்தை சினிமா ரசிகர்களும், DC ரசிகர்கள்களும் கொண்டாடும் படி விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் படமாக கொடுக்க முயற்சித்துள்ளார். பேட்மேன் படத்திற்க்கே உண்டான பாணியில் படம் முழுக்க இருட்டாக இருந்தாலும் பல காட்சிகள் ரசிக்கும் படி ஒளிப்பதிவு இருக்கிறது.
பின்னணி இசை அமைதியாகவும், முக்கிய இடங்களில் நம்மை சிலிர்க்க வைக்கும் படியும் உள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடும் திரைப்படத்தில் ஆங்காங்கே சில தொய்வுகள் இருந்தாலும், திரைக்கதை நம்மை ஈடுபாட்டுடன் இருக்க வைத்துள்ளது.
க்ளாப்ஸ்
Matt Reeves-ன் திரைக்கதை மற்றும் படத்தின் மற்ற டெக்னிக்கல் விஷயங்கள்
Robert Pattinson-ன் புதிய பேட்மேன் அவதாரம்
பல்ப்ஸ்
படத்தின் நீளம் காரணமாக சில இடங்களில் கொஞ்சம் மெதுவாக செல்கிறது.
(மொத்தத்தில் The Batman இதுவரை பார்த்திராத பேட்மேனை, DC ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ரசிக்கும் படியான திரைப்படமாக வந்துள்ளது)
3.5/5