பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர்.. 50 லட்சம் வெற்றி பரிசு.. கையில் கோப்பையுடன் இதோ
ரசிகர்களின் எதிர்பார்ப்பின் கீழ் காத்திருந்த ஓர் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4ன் பைனல்.
இதில் ரியோ,ஆரி,சோம்,பாலாஜி,ரம்யா என 5 போட்டியாளராக மக்களின் வாக்குகள் மூலம் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் சோமசேகர் 5ஆம் இடத்தையும், ரம்யா 4ஆம் இடத்தையும், ரியோ 3ஆம் இடத்தையும் பிடித்து வெளியேறினார்.
இறுதியில் காத்துக்கொண்டிருந்த ஆரி மற்றும் பாலாஜி இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் என்று தெரியவந்தது.
இந்நிலையில் இந்த இருவரில் மக்களிடமிருந்து பல கோடி வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் நடிகர் ஆரி.
மேலும் அவருக்கு கீழ் 2ஆம் இடத்தை பிடித்து ரன்னர் அப் ஆகியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.