The Cat in the Hat: திரை விமர்சனம்

By Sivaraj Nov 06, 2026 02:07 PM GMT
Report

வார்னர் பிரதர்ஸின் தயாரிப்பில் வெளியாகியுள்ள The Cat in the Hat அனிமேஷன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

The Cat in the Hat என்ற பெரிய பூனை, விசித்திர உயிரினங்கள் மனித உலகிற்கு வருகை தரும் ஒரு நிறுவனத்தின் ஊழியராக செயல்படுகிறது.

கடைசியாக அந்த பூனை செய்த ஒரு விஷயத்தால்,நிறுவனத்தின் CEO ஹூகிபூம் வேலையை விட்டு வெளியேற்ற முடிவு செய்கிறார்.

ஆனால், HR ஷெர்ரியின் பரிந்துரையால் வேளையில் நீடிக்க The Cat in the Hat-க்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி, ஹூகிபூம் சவாலான வழக்கு ஒன்றை முடிக்கும்படி பூனை-க்கு வேலை கொடுக்கிறார்.

The Cat in the Hat: திரை விமர்சனம் | The Cat In The Hat Movie Review

அவரது தந்திரத்தால் பொருட்கள் வைக்கும் அறைக்கும் செல்லும் பூனை, Go-Backer என்ற டைம் டிராவல் கடிகாரத்தை எடுக்கிறது.

அதனை எடுத்துக் கொண்டு கேபி, செபாஸ்டியன் என்ற சகோதரி, சகோதரனை அவர்களது வீட்டில் பூனை சந்திக்கிறது.

முதலில் பூனையின் திடீர் வருகையால் அதிர்ச்சியடையும் கேபி, செபாஸ்டியன் டைம் டிராவல் கடிகாரத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர்.

பின்னர் கேபி பூனையிடம் இருந்து டைம் டிராவல் கடிகாரத்தைப் பிடுங்கி, தங்களது பழைய வீட்டிற்கு செல்ல முயற்சிக்கிறாள்.

அதன் விளைவாக, பூனையின் மந்திரத்தினால் பாக்கெட் பரிமாணங்களாக மாற்றப்பட்ட 3 பெட்டிகளுக்குள் ஒன்றில் டைம் டிராவல் கடிகாரம் விழுந்து தொலைந்து போகிறது.

அதன் பின்னர் மூவரும் சேர்ந்து அதனை கண்டுபிடிக்க களமிறங்குகிறார்கள். அவர்களுக்கு அந்த கடிகாரம் கிடைத்ததா? கேபி, செபாஸ்டியனின் சோகம் மகிழ்ச்சியாக மாறியதா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

அமெரிக்க எழுத்தாளர், தயாரிப்பாளர் எரிக்கா ரிவினோஜா மற்றும் குங் பூ பண்டா உள்ளிட்ட பல அனிமேஷன் படங்களுக்கு பணியாற்றிய அலெசான்ட்ரோ கார்லோனி ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.

2003ஆம் ஆண்டில் வெளியான The Cat in the Hat திரைப்படம் ஓரளவு வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது அனிமேஷன் வடிவில் அதே கதையை வார்னர் பிரதர்ஸ் கொடுத்துள்ளனர்.

பொதுவாக அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்காக எடுக்கப்படும்; அந்த வகையில் இந்தப் படம் அம்மாவின் தியாகத்தை பிள்ளைகள் எப்படி புரிந்துகொண்டார்கள் என்ற கதையை நேர்த்தியாக கொடுத்துள்ளது வார்னர் பிரதர்ஸ்.

The Cat in the Hat தோன்றும் ஆரம்ப காட்சியிலேயே அலப்பறையை ஆரம்பித்து விடுகிறது. அந்த பூனை பணியாற்றும் நிறுவனத்தை காட்டும் போதே பெரியவர்களும் குழந்தைகளாக மாறி வியந்து பார்ப்பார்கள்.

அந்தளவிற்கு கவரும்படியாக கதாபாத்திரங்கள் அனிமேஷனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கேரியின் அறிமுக காட்சியில் நெப்போ கிட் என்று The Cat in the Hat கிண்டல் செய்வது செம Thug மொமெண்ட்.

கேபி, செபாஸ்டியனுடன் பெட்டிக்குள் பயணிக்கும் காட்சிகளை 3D-யில் பார்க்கும்போது மிரட்டலாக உள்ளது.

இராட்சத ஜந்துவுடன் கிளைமேக்சில் மோதும் சண்டைக்காட்சி சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளது. காமெடியை விட எமோஷனல் காட்சிகள் நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளன.

மைனஸ் பாயிண்ட் ஆக கூறவேண்டும் என்றால் பெரிதளவில் காமெடி இல்லை; ஆங்காங்கே திரைக்கதையை தொய்வு ஏற்படுவதை உணர முடிகிறது.

என்றாலும் திருப்திகரமான எமோஷனல் கிளைமேக்ஸ் மற்றும் ட்விஸ்ட் ஆகியவற்றில் இப்படம் பாஸ்மார்க் வாங்குகிறது.

டேன் மோலினா எடிட்டிங் கொஞ்சம் சரி செய்திருக்கலாம். லோர்ன் பேல்ஃபின் இசை கச்சிதம்; பிண்ணனி குரல் கொடுத்தவர்கள் நேர்த்தியான வேலையை செய்திருக்கின்றனர்.

க்ளாப்ஸ்  

கதைக்கரு

அனிமேஷன் காட்சிகள்

கிளைமேக்ஸ்

எமோஷனல் காட்சிகள்

பல்ப்ஸ்

சில இடங்களில் தொய்வாகும் திரைக்கதை

காமெடி குறைவு

மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் The Cat in the Hat-ஐ நம் வீட்டு குட்டீஸை அழைத்துச் சென்று ரசிக்கலாம்.

ரேட்டிங்: 2.75/5 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US