இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகை
சினிமா திரையுலகில் இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது அல்லது அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் 80 -ஸ் மற்றும் 90 - ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இவர் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவரது தந்தை, அண்ணன் மற்றும் தங்கை அனைவருமே திரையுலகை சேர்ந்தவர்கள் தான். சினிமா குடும்பத்தை சேர்ந்த இவர் இன்றும், சில படங்களில் அம்மா, மற்றும் கௌரவ கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.
இவர் தானா
அசத்தலான நடிப்பு, நடனம் என தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வரும் இவர் வேறு யாருமில்லை தமிழ் திரையுலகம் மற்றும் அரசியலில் தடம் பதித்த நடிகர் எம்ஆர் ராதாவின் மகளான ராதிகா தான்.
நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு இன்றும் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இவருடைய குழந்தை வயது புகைப்படங்கள் தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
