The Devil Wears Prada 2: திரை விமர்சனம்

By Sivaraj May 01, 2026 11:20 AM GMT
Report

ஆனே ஹாத்வே, எமிலி ப்ளண்ட், மெரில் ஸ்ட்ரீப் ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள The Devil Wears Prada 2 பார்வையாளர்கள் ரசனைக்கு தீனி போட்டதா என்று பார்ப்போம் வாங்க.

The Devil Wears Prada 2: திரை விமர்சனம் | The Devil Wears Prada 2 Movie Review

கதைக்களம்

வான்கார்ட் எனும் ஊடகத்தில் வேலை பார்த்து வரும் ஆண்டி சாக்ஸ் (ஆனே ஹாத்வே) விருது பெறும்போது வேலையை இழக்கும் செய்தியை காண்கிறார். இதனால் மனமுடையும் அவர் விருது பெற்ற மேடையிலேயே இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிறது. ரன்வே நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் மிராண்டா (மெரில் ஸ்ட்ரீப்) ஒரு தவறினால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிறார். இந்த சூழலில்தான் ரன்வேயின் நிறுவனரான இர்வ், நேரடியாக ஆண்டி சாக்ஸிற்கு போன் செய்து தங்கள் நிறுவனத்தின் ஆசிரியராக அவரை பணியமர்த்துவதாக கூறுகிறார்.

The Devil Wears Prada 2: திரை விமர்சனம் | The Devil Wears Prada 2 Movie Review

இதனை சற்றும் எதிர்பார்த்திராத ஆண்டி சாக்ஸ், 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மிரண்டாவிடம் இணைந்து பணியாற்றும் மகிழ்ச்சியில் அலுவலத்திற்கு செல்கிறார். ஆனால் அங்கு மிராண்டா அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. என்றாலும் நிறுவனம் மற்றும் மிராண்டா மீதான விமர்சனத்தை சரிசெய்ய பார்க்கிறார் ஆண்டி சாக்ஸ்.

அப்போதுதான் டியோர் விளம்பரதாரர் ஒருவரை இருவரும் சந்திக்க அது ரன்வேயில் மிரண்டாவிற்கு கீழ் பணியாற்றிய எமிலி சார்ல்டன் (எமிலி பிளண்ட்) என்று தெரிய வருகிறது. அதன் பின்னர் மிரண்டாவின் பெருமையை ஆண்டி எப்படி மீட்டெடுத்தாள் என்பதே மீதிக்கதை.

The Devil Wears Prada 2: திரை விமர்சனம் | The Devil Wears Prada 2 Movie Review

படம் பற்றிய அலசல்

2006யில் வெளியான The Devil Wears Prada திரைப்படத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியாகியுள்ளது. அப்போதே சக்கைபோடு போட்ட படம் என்பதால் இரண்டாம் பாகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

குறிப்பாக தமது இலக்கினை நோக்கி ஓடும் பெண்களை ஈர்க்கும் வகையிலான கதைக்களம், பாத்திர படைப்பு ஆகியவை இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைத்தது. திரையரங்கிற்கு வருகை தந்தவர்களில் 80 சதவீதம் பெண்கள்தான் என்பதே இப்படத்தின் வெற்றி என்று கூறலாம்.

The Devil Wears Prada 2: திரை விமர்சனம் | The Devil Wears Prada 2 Movie Review

படத்தை பொறுத்தவரை அடாவடியான மேலதிகாரி கதாபாத்திரம், நவீன காலத்தில் பேஷன் உலகில் தடுமாறுவதையும், மிடுக்காக பார்த்த உயரதிகாரியின் இன்றைய கையறு நிலையை கண்டு கலங்கும் முன்னாள் ஊழியரின் மனநிலையையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

Patriot திரைவிமர்சனம்

Patriot திரைவிமர்சனம்

மெரில் ஸ்ட்ரீப், ஆனே ஹாத்வே மற்றும் எமிலி பிளண்ட் ஆகிய மூவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். ஆனாலும் ஆனே ஹாத்வேயே ஒரு படி மேலே ஸ்கோர் செய்கிறார். 20 ஆண்டுகள் கழித்து மிரண்டாவை பார்த்த பின் பரவசப்படுவது, அப்படி இருந்த நபரா இப்படி இருக்கிறார் என்று ஆச்சரியப்படுவது என்று பல காட்சிகளில் அசத்துகிறார்.

The Devil Wears Prada 2: திரை விமர்சனம் | The Devil Wears Prada 2 Movie Review

எமிலி ஓப்பனிங் சீனிலேயே ஆனேவை நோஸ்கட் செய்யும் காட்சி திரையரங்கில் குபீர் சிரிப்பு மொமெண்ட். அதேபோல் மெரில் அசால்டாக ஆனேவை யார் நீ என்று கேட்கும் காட்சி அவரது கதாபாத்திரம் அப்படியேதான் இன்னும் இருக்கிறது என்று காட்டுகிறது. அதே சமயம் இரண்டாம் பாதியில் தான் அவமானப்படுத்தப்படும் இடத்தில் கெத்தை விடாமல் இருப்பதில் மெரில் ஸ்கோர் செய்கிறார்.

பெண்களுக்கு முக்கியத்துவத்தை கொடுத்து படத்தை எடுத்திருந்தாலும், உண்மையான விசுவாசியாக 20 ஆண்டுகளாக ஓர் ஆண் இருக்கிறான் என்பதையும் காட்டி இயக்குநர் கைதட்டல் பெறுகிறார். என்னதான் டிராமா படமாக இருந்தாலும் காமெடி, நடிகர்களின் எதார்த்த நடிப்பு, சிறந்த எடிட்டிங்கினால் எங்கும் திரைக்கதை தொய்வாகவில்லை.

The Devil Wears Prada 2: திரை விமர்சனம் | The Devil Wears Prada 2 Movie Review

க்ளாப்ஸ்

நடிகைகளின் நடிப்பு

காமெடி எமோஷனல் காட்சிகள்

வசனங்கள்

பல்ப்ஸ்

பெரிதாக ஒன்றுமில்லை

மொத்தத்தில் இந்த The Devil Wears Prada 2 இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சி செய்துவிட்டது. பெண்கள் கொண்டாடக்கூடிய படம்.

The Devil Wears Prada 2: திரை விமர்சனம் | The Devil Wears Prada 2 Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US