The Dinosaurs டாக்குமெண்ட்ரி எப்படி இருக்கு? ஒரு சிறப்பு பார்வை

Report

டைனோசர் டைனோசர் என்றாலே 6 லிருந்து 60 வயது வரை ஒரு ஆர்வம் இருக்கும். அதனாலயே ஸ்டிவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளிவந்த ஜுராசிக் பார்க் 1990 களிலேயே 1 பில்லியன் டாலர் வசூல் செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

The Dinosaurs டாக்குமெண்ட்ரி எப்படி இருக்கு? ஒரு சிறப்பு பார்வை | The Dinosaurs Documentary Review

அதை தொடர்ந்து இத்தனை ஆண்டு காலம் பல டைனோசர் படங்கள் வெளிவந்து பல ஆயிரம் கோடிகளை சந்தித்து விட்டது. அதனாலேயே ஸ்டிவன் ஸ்பீல்பெர்க் தயாரித்து தற்போது நெட்ப்ளிக்ஸில் வெளிவந்துள்ள தி டைனோசர் மினி சீரிஸ் உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, சரி இந்த சீரிஸ் எப்படியிருக்கு? பார்ப்போம்.

மில்லியன் வருடங்கள் கடந்த பயணம்

இந்த டாக்குமெண்ட்ரி 4 எபிசோட்கள் ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள் என எடுத்துள்ளனர், அதிலும் வாய்ஸ் ஓவருக்கு ஓர் ஆஸ்கர் கொடுக்க வேண்டும் என்றால் அது மார்கன் ப்ரீமேனுக்கு தான் கொடுக்க வேண்டும், அவரின் காந்த குரலிலேயே இந்த சீரிஸ் தொடங்குகிறது.

The Dinosaurs டாக்குமெண்ட்ரி எப்படி இருக்கு? ஒரு சிறப்பு பார்வை | The Dinosaurs Documentary Review

சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் இந்த உலகை எப்படி ஆட்சி செய்தது என்பதை காட்டி, அதன் முதல் தொடக்கம் எது என்பதை 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்று காட்டியுள்ளனர்.

அப்போதுன் ஊர்வன உயிர்கள் மட்டுமே இந்த பூமியை ஆட்சி செய்து வருகிறது, அதில் முதன் முறையாக கோழி போல் ஓர் டைனோசரின் ஆதி புள்ளி-யாக ஒன்று தோன்றுகிறது.

The Dinosaurs டாக்குமெண்ட்ரி எப்படி இருக்கு? ஒரு சிறப்பு பார்வை | The Dinosaurs Documentary Review

அதிலும் 4 உயிர்களில் 3 உயிர் ஊர்வன உயிரினங்களால் கொல்லப்படுகிறது, ஒன்று மட்டுன் தப்பித்து இந்த உலகத்திற்கு டைனோசர் என்ற ஒரு மிகப்பெரிய உயிரினம் தோன்றுவதற்கு ஒரு தொடக்கமாக உள்ளது.

டைனோசர் வளர்ச்சி

உலகம் பல அழிவுகளை கண்டு தான் இன்று நாம் வாழும் நிலம் நமக்கு எல்லா வளமும் கொடுக்கும் இடமாக மாறியுள்ளது. அப்படி தான் பல மில்லியன் ஆண்டுகள் ஊர்வன உயிரினங்களே ஆண்டு வர, காலத்தின் பரிமாண வளர்ச்சி டைனோசர் என்ற உயிரினத்தை அந்த கோழி போல் உள்ள உயிரினத்திலிருந்து பிறக்கின்றது.

டாக்குமெண்ட்ரி என்றால் எதோ கதை சொல்லி கொண்டே போவார்கள் என்று தப்பு கணக்கு போட வேண்டும், டைனோசர்களின் பரிமான வளர்ச்சியை அத்தனை அழகான சிஜி ஒர்க்-வுடன் அதன் பிரமாண்டத்தை காட்டிய விதம், அதன் வேட்டையாடும் குணம் என காட்டியது ஏதோ திரில்லர் படம் பார்ப்பது போல் அத்தனை சுவாரஸ்யம்.

The Dinosaurs டாக்குமெண்ட்ரி எப்படி இருக்கு? ஒரு சிறப்பு பார்வை | The Dinosaurs Documentary Review

The Bride! திரை விமர்சனம்

The Bride! திரை விமர்சனம்

அதிலும் டைனோசர்கள் பெண் இனத்தை எப்படி கவரும், சைபரோஸ் என்ற இனம் எப்படி வேட்டையாடும், அந்த இனம் தான் தற்போது உள்ள கொக்கு வகை என்பது போல் காட்டியது எல்லாம் பரிமாண வளர்ச்சியின் உச்சம் என்பதை விட ஆச்சரியத்தின் அளவுகோலுக்கு எல்லையே இல்லை என்பதை காட்டுகிறது.

என்ன ஒரே குறை இத்தனை பெரும் சாம்ராஜ்ஜியத்தை வெறும் 4 எபிசோட்களில் அடக்கி வேகவேகமாக சென்றது போல் போன்ற உணர்வு, கண்டிப்பாக 8 எபிசோட்களுக்கு குறைவாக எடுக்க முடியாத ஒரு நீண்ட பயணத்தை 4 எபிசோட்-களில் காட்டியது தான் ஏமாற்றம்.

The Dinosaurs டாக்குமெண்ட்ரி எப்படி இருக்கு? ஒரு சிறப்பு பார்வை | The Dinosaurs Documentary Review

பிறகு என்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பாக பார்த்து கொண்டாடி பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டிய சீரியஸ் தான் இந்த தி டைனோசர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US