விஜய்யின் 68வது படத்தில் சில நிமிடமே வரும் காட்சிக்காக இத்தனை கோடி செலவா?- லேட்டஸ்ட் அப்டேட்
விஜய் 68
நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கடைசியாக லியோ என்ற படத்தை கொடுத்தார்.
அப்படம் செம மாஸ் வெற்றியடைய படக்குழு சென்னையில் படு பிரம்மாண்டமாக வெற்றி விழா எல்லாம் கொண்டாடினார்கள். இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க தொடங்கினர்.
லேட்டஸ்ட் அப்டேட்
வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இந்த படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் விஜய் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இளமையான காட்சிகளில் தோன்ற இருக்கும் நிலையில் அதற்காக செலவு மட்டும் கிட்டத்தட்ட ரூ. 6 கோடி என கூறப்படுகிறது.
இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் ஒரு சில நிமிட காட்சிக்கு இத்தனை கோடியா என ஆச்சரியத்தில் உள்ளனர்.