வலிமை படத்தின் முதல் ரீவ்யூ, தயாரிப்பாளர் போனி கபூர் கூறிய அதிரடி தகவல்
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.
மேலும் அடுத்ததாக இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார், மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபகாலமாக தல அஜித் தொடர்ந்து தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார், அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித் பதக்கத்தையும் வென்று அசத்தியிருந்தார்.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அப்படத்தின் முதல் விமர்சனத்தை ரசிகர்களுக்கு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது "திட்டமிடப்பட்டிருந்த 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் முடிந்துவிட்டது.
இப்போது ஸ்பெயினில் சண்டைக் காட்சிகளை படமாக்க குழு காத்திருக்கிறது. இதற்கிடையே அஜித்தின் 'வலிமை' கடினமான அதிரடி சண்டை காட்சிகளால் நிரம்பிய ஒரு பவர் பேக்டு குடும்பப் படமாக இருக்கும்" என கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri