The Garfield Movie : திரை விமர்சனம்
தி சிக்கன் லிட்டில் பட புகழ் இயக்குனர் மார்க் டிண்டால் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் "The Garfield Movie" அனிமேஷன் படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
ஜான் என்பரின் வீட்டில் Garfield எனும் பூனை சொகுசாக வாழ்கிறது.
அதனுடன் ஓடி என்ற நாயும் சேர்ந்துக்கொண்டு சேட்டைகள் செய்கின்றன.
அப்பாவை பிரிந்த கவலை இல்லாமல் சுதந்திரமாக வாழும் garfieldஐயும், ஓடியையும் இரண்டு நாய்கள் கடத்துகின்றன.
அதன் பின்னர் ஜின்க்ஸ் என்ற பூனை கொடுக்கும் டாஸ்கை garfield தனது அப்பா விக்குடன் சேர்ந்து முடிக்க வேண்டும்.
Garfield அதனை செய்து காட்டியதா? ஜின்க்ஸ் ஏன் அந்த டாஸ்க்கை கொடுத்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக 3டியில் வந்திருக்கும் Garfield குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இயக்கியிருக்கிறார் மார்க் டிண்டால்.
தமிழ் டப்பிங்கில் வசனங்கள் அனைத்தும் சிரிக்க வைக்கும் ரகம்.
மிஷன் இம்பாசிபுல் படத்தின் காட்சியைப் போல் ஸ்கெட்ச் போடும் சீன் நகைச்சுவையின் உச்சம்.
அதே போல் டாம் குரூஸ் பெயரை குறிப்பிடுவது போன்ற சில கிண்டலயும் இயக்குனர் செய்திருக்கிறார்.
Garfiled-ஐ அதன் அப்பா விக் சிறுவயதில் விட்டு சென்றதற்கான பிளேஷ்பேக் காட்சி நெகிழ்ச்சி.
அதேபோல் ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் வரும் கிளைமேக்ஸ் காட்சி அதகளம்.
கிளாப்ஸ்
அனிமேஷனின் நேர்த்தி
நகைச்சுவை காட்சிகள்
குழந்தைகளை கவரும் திரைக்கதை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றும் இல்லை.
மொத்தத்தில் கோடை விடுமுறைக்கு கட்டாயம் குழந்தைகளை அழைத்து சென்று என்ஜாய் செய்யும் வகையில் ஜெயிக்கிறது இந்த The Garfield Movie.
ரேட்டிங் : 3.5/5

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
