The Heart of Beast: திரை விமர்சனம்
F1 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிராட் பிட் நடிப்பில் வெளியாகியுள்ள தி ஹார்ட் ஆஃப் பீஸ்ட் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
ஜேம்ஸ் பெல்மாண்ட் என்ற ஓய்வுபெற்ற இராணுவ சிறப்புப்படை வீரர், தனது மனரீதியாக அதிர்ச்சிக்குள்ளான மற்றும் ஒரு கால் பாதிக்கப்பட்ட நாய் ஓடின் உடன் தனி விமானத்தில் செல்கிறார். அலாஸ்கா வனப்பகுதியில் பகுதியில் தரையிறங்கும் ஜேம்ஸ், ஓய்வெடுக்கும்போது முதியவர் ஒருவரை சந்திக்கிறார்.
அவருடன் சில உரையாடலை நிகழ்த்திய பிறகு மறுநாள் அங்கிருந்து புறப்படுகிறார் ஜேம்ஸ். விமானம் பார்க்கும்போதே அவருக்கு இதயப் பிரச்சனை ஏற்பட மயக்கமாகிறார். இதனால் தாறுமாறாக பறக்கும் விமானம் விபத்திற்குள்ளாகிறது.

விமானம் முற்றிலும் சேதமடைந்து ஏரியில் மூழ்கியிருக்கிறது. அதில் கண் விழிக்கும் ஜேம்ஸ், கஷ்டபட்டு தனது உடைமைகளை வெளியே எடுத்து வருகிறார். பாதி வழியில் விமானத்தில் இருந்து தவறி விழுந்த நாய் ஓடினை தேடி அலையும் ஜேம்ஸ் ஒருவழியாக கண்டுபிடித்து விடுகிறார்.
அதன் பின்னர் மேப் ஒன்றை எடுத்து பார்க்கும் அவர், இன்னும் 58 மைல்கள் தூர பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என ஓடினிடம் கூறுகிறார். இதய பிரச்சனையுடன் செயற்கை கால் பொருத்தப்பட்ட நாயுடன் ஜேம்ஸ் எப்படி பல ஆபத்துகளை தாண்டி தப்பினார் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
2014யில் வெளியான ஃப்யூரீ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு டேவிட் அயருடன் தயாரிப்பாளராகவும் பிராட் பிட் கைகோர்த்திருக்கும் படம் இது. சர்வைவல் திரில்லர் என்றாலே, எப்படி தப்பித்தார் (கள்) என்கிற ஒரே டெம்ப்ளேட் தான்.
ஆனால் அதை எந்த அளவிற்கு திரைக்கதையில் சுவாரசியப்படுத்த முடியும் என்பதில் தான் சவால் இருக்கிறது. அதனை மிகச்சிறப்பாக செய்து முடித்துள்ளார் இயக்குநர் டேவிட் அயர். பிராட் பிட்டிற்கும், நாயுக்குமான உறவை அழகாக நேர்த்தியாக காட்டியிருக்கிறார்.

கனவு கண்டு பயந்து நாயை ஆசுவாசப்படும் பிராட், ஒரு பெரிய கரடியை நேருக்கு நேர் அதனை எதிர்கொள்ள செய்யும் காட்சி மிரட்டல். காட்டு விலங்குகளுடன் இருவரும் நடத்தும் சண்டை அபாரம். பிராட் பிட் சக நண்பரிடம் பேசுவதுபோல் நாயுடன் உரையாடும் காட்சி மிக எதார்த்தமாக உள்ளது.
மயூரோ ஃபியோரேவின் ஒளிப்பதிவும், ஜெரார்ட் மைக்கேலின் இசையும் திரையைவிட்டு நம்மை அகலா வண்ணம் பார்த்துக் கொள்கின்றன. நாய் வளர்ப்பவர்கள் மற்றும் பிராணிகளை நேசிப்பவர்கள் ஆகியோரை இத்திரைப்படம் கண்டிப்பாக ஈர்க்கும்.

க்ளாப்ஸ்
- பிராட் பிட்.. பிராட் பிட்.. பிராட் பிட்
- உபேர் (நாய்)
- திரைக்கதை
- ஒளிப்பதிவு மற்றும் இசை
பல்ப்ஸ்
- பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த ஹார்ட் ஆஃப் பீஸ்ட் பார்வையாளர்களுக்கு செம ட்ரீட். திரையரங்கில் தவறவிடக் கூடாத திரைப்படம்.

பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri