அச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே மாறிய பிரபல நடிகர்! முக்கிய நாளில் வெளியான புகைப்படங்கள்!
திரையுலகில் பெரும் நட்சத்திரமாகவே மின்னியவர் எம்.ஜி.ஆர். சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வந்து சீனிமாவில் பெரும் சாம்ராஜ்ஜியம் செய்துவிட்டார். எத்தனை எத்தனை படங்கள், ஹீரோவாக பல நடிகைகளுடன் நடித்திருந்தார்.
வாழ்க்கையை பிரதிபலிக்கு படங்களும், கருத்துள்ள வசனங்களும், தன்னம்பிக்கையூட்டும் பாடல்களும் மக்கள் மனதில் ஆழப்பதிந்துவிட்டன. படங்களில் இருப்பது போலவே குணங்களை தன் சொந்த வாழ்க்கையிலும் அமைத்துக்கொண்டார்.
தமிழக முதலமைச்சராக அப்போதே ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மக்களின் ஆசிர்வாதத்தை கேட்டு வாங்கி விட்டு பின்பே முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்தார்.
ஏழை, எளிய மக்கள் பலருக்கும் அள்ளி தானம் வழங்கினார், அவர் இறந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் அவருக்கு அவரின் கொள்கைகளை பின்பற்றும் ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கிறது.
எம்.ஜி.ஆருடன் இணைந்து அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது தலைவி என எடுக்கப்பட்டு வருகிறது.
ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்க பாலிவுட் சினிமாவின் கங்கனா ரனாவத் ஜெலலிதாவாக நடிக்க, நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று இப்படத்தில் அரவிந்த் சாமியின் கெட்டப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் அரவிந்த சாமியா என கண்டுபிடிக்க முடியாதபடி எம்.ஜி.ஆர் போலவே இருக்கிறார்.
புகைப்படங்கள் இதோ...
It was not just an honour to play the role of Puratchi Thalaivar MGR, but a great responsibility. I thank director A.L. Vijay & producers @vishinduri @shaaileshrsingh for having faith in me. I humbly post these pics in Thalaivar’s memory, today.#Thalaivi #MGR #ArvindSwamiasMGR pic.twitter.com/F4KY07Q4Dt
— arvind swami (@thearvindswami) December 24, 2020