ரஜினியை விட அதிகமாக சம்பளம் வாங்கிய நடிகை.. யார் அந்த நடிகை தெரியுமா?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக ரஜினி விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் உருவாகி வருகிறது.
நடிகர் ரஜினி திரையுலகில் நடிக்க துவங்கிய போது பல திரைப்படங்கள் நடிகர் கமலுடன் இணைந்து ஒன்றாக நடித்துள்ளார்.
அதில் ஒரு திரைப்படம் தான் இளமை ஊஞ்சலாடுகிறது. இதில் ரஜினி, கமலுடன் இணைந்து ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இப்படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி ரூ. 75,000 சம்பளமாக வாங்கியுள்ளார்.
ஆனால் கதாநாயகியாக நடித்த நடிகை ஜெயசித்ரா இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 1 லட்சத்தி 10 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
இதனால் அப்போதே ரஜினியை விட அதிகமாக நடிகை ஜெயசித்ரா சம்பளம் வாங்கியுள்ளார் என்று, அப்படத்தின் தயாரிப்பாளர் எல். சுரேஷ் கூறியுள்ளார்.