The Invite: திரை விமர்சனம்

By Sivaraj Jul 11, 2026 11:40 AM GMT
Report

பெனிலோப் க்ரூஸ், எட்வர்ட் நோர்டன் ஆகியோர் நடிப்பில் ஒலிவியா வில்டே இயக்கி நடித்திருக்கும் The Invite ஹாலிவுட் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம் வாங்க.

கதைக்களம்

இசைத்துறையில் பணியாற்றி வரும் ஜோ (சேத் ரோகன்), தனது ஏஞ்சலாவுடன் (ஒலிவியா) சுமூக உறவில் இல்லாததால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வருகிறது.

இந்த சூழலில் மேல்வீட்டிற்கு புதிதாக குடிவந்திருக்கும் பினா (பெனிலோப்), ஹாக் (எட்வர்ட்) ஜோடி ரொமாண்டிக்கான சமயங்களில் எழுப்பும் சத்தம் தங்களை தொந்தரவு செய்வது குறித்தும் ஜோ ஏஞ்சலாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

அதன் எதிரொலியாக பினா, ஹாக் இருவரை எதிர்கொள்ள ஜோ திட்டமிடும் வேளையில், ஏஞ்சலா அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைக்கிறார்.

அவர்களுடன் நட்பாக வேண்டும் என்று ஏஞ்சலா நினைத்து இதனை செய்ய, வீட்டிற்குள் நுழையும் ஜோ அவர்களின் இருப்பைப் பார்த்து பதற்றமாகிறார்.

விருந்து உபசரிப்பிற்கு இருவரும் தயாராக இல்லை என்பதை புரிந்துகொண்டு பினாவும், ஹாக்கும் தனித்தனியாக தம்பதியிடம் உரையாடலைத் தொடங்குகின்றனர்.

அதன் பின்னர் இரண்டு தம்பதிக்குள்ளும் என்ன மாதிரியான உரையாடல் நிகழ்ந்தது, ஜோ மற்றும் ஏஞ்சலாவின் திருமண வாழ்க்கை எப்படி பினா, ஹாக்கினால் சரியானது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

ஹாலிவுட் நடிகையான ஒலிவியா வில்டே இயக்கத்தில் வெளியாகியுள்ள மற்றொரு படம்தான் இந்த The Invite.

2020யில் வெளியான The People Upstairs என்ற ஸ்பானிஷ் படத்தைத்தான் ஒலிவியா ஹாலிவுட்டில் ரீமேக் செய்துள்ளார்.

தம்பதிக்கு இடையே உள்ள மனம் சார்ந்த பிரச்சனைகள், தாம்பத்திய வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

புதிதாக வீட்டிற்கு வரும் விருந்தினரை கையாள்வதில் உள்ள சிக்கல்கள், நம் வீட்டு பிரச்சனைகளை காட்டிக்கொள்ளாமல் அனுசரிப்பது போன்றவற்றை எதார்த்தாக காட்டியுள்ளார்.

அதை விட முக்கியமாக தாம்பத்திய வாழ்க்கை குறித்து மிகவும் வெளிப்படையாக ஒரு பெண்ணின் தரப்பில் இருந்து பேசிய வசனங்கள் எல்லாம் ஆச்சரியப்பட வைக்கும்.

அதே சமயம் கலாச்சார ரீதியாக சில விஷயங்களை பேசுவது பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதனை சாதாரண ஒன்றாக காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

இயக்குநராக மட்டுமல்லாமல் ஹீரோயினாகவும் நடித்துள்ள ஒலிவியா ஏஞ்சலா என்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

கணவர் தவற பேசி வாய்விடும் போதெல்லாம் அதனை சமாளிக்க ஒலிவியா படும்பாடு சிரிப்பலை. அதேபோல் ஜோ கதாபாத்திரத்தை செய்திருக்கும் சேத் காமெடியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

பிரபல நடிகையான பெனிலோப் க்ரூஸ் முதிர்ச்சியான நடிப்பை ஜஸ்ட் லைக் தட் என வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்தவரின் தவறுகளை அவர் சுட்டிக்காட்டும் விதம் அருமை. அத்துடன் தோற்ற வசீகரத்திலும் அவர் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கிறார்.

எட்வர்ட் அமைதியான நபராக படம் முழுக்க தனியாக ஸ்கோர் செய்கிறார். கிளைமேக்சில் அவர் செய்யும் ஒரு விஷயத்தால் திரையரங்கே குபீர் சிரிப்புக்கு செல்கிறது.

வயது வந்தோருக்கான இப்படத்தில் பேசப்படும் விஷயங்கள் எல்லாம் திருமணமானவர்களுக்கு கண்டிப்பாக கனெக்ட் ஆகும்.

டெவோன்ட் ஹைனெஸின் இசை சிறப்பாக அமைந்துள்ளது. ஒரே வீட்டில் வைத்து எடுத்தாலும், ஒளிப்பதிவாளர் ஆடாம் நியூபோர்ட் வித்தை காட்டியுள்ளார்.

ஒரே வீட்டில் நான்கு பேரை மட்டும் காட்டி சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற சவாலை மிக கச்சிதமாக கையாண்டுள்ளனர் படத்தொகுப்பாளர்கள் யோர்கோஸ் மற்றும் அந்தோணி பாய்ஸ்.

க்ளாப்ஸ்

  • நடிகர்கள்
  • திரைக்கதை
  • வசனங்கள்
  • கிளைமேக்ஸ்  

பல்ப்ஸ்

சில ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை, சாதாரணமாக புகுத்த முயற்சிப்பது மொத்தத்தில் The Invite தம்பதிகள் பார்த்து புரிந்துகொள்ள வேண்டிய திரைப்படம்.

ரேட்டிங்: 3.25/5 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US