25 நாட்களாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தி லெஜண்ட்.. வேற லெவல் மாஸ்
தி லெஜண்ட்
லெஜண்ட் சரவணனின் நடிப்பில் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தி லெஜண்ட்.
மாஸ் ஆக்ஷன் கமெர்ஷியல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஆனால், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆம், இதுவரை ரூ. 12.5 கோடிக்கும் மேல் தி லெஜண்ட் திரைப்படம் வசூல் செய்துள்ளது.
இப்படத்தில் சரவணனுடன் இணைந்து விஜயகுமார், நாசர், விவேக், லதா, ரோபோ ஷங்கர், கீத்திகா டிவாரி என பலரும் நடித்திருந்தார்கள்.
25 நாட்களாக திரையரங்கில்
இந்நிலையில், இன்றுடன் திரையரங்கில் 25 நாட்களை தி லெஜண்ட் திரைப்படம் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. சென்னையில் உள்ள முக்கியமான மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களில் தி லெஜண்ட் ஓடிகிண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இதை லெஜண்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ' மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய வெற்றி ' என அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.
மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய வெற்றி #TheLegendRunningSuccessfully on #25thDay @DirJdjerry @Jharrisjayaraj @_TheLegendMovie pic.twitter.com/yUPXZQxxsH
— Legend Saravanan (@yoursthelegend) August 21, 2022

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
