தி லெஜண்ட் திரைவிமர்சனம் ?/5
ஜேடி - ஜெரி இணைந்து இயக்கி சரவணன் அருள் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தி லெஜண்ட். சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில் பிரபு, விஜயகுமார், விவேக், Urvashi Rautela, சுமன், நாசர், யோகி பாபு, மயில்சாமி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சரவணன் அருள் தயாரித்து, நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி படத்தின் மேல் ரசிகர்கள் வைத்திருந்த முழு எதிர்பார்ப்பையும் தி லெஜெண்ட் பூர்த்தி செய்ததா? வாங்க பார்க்கலாம்..
கதைக்களம்
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியாக இருக்கும் சரவணன், பல சாதனைகளை செய்து உலகநாடுகளை அசரவைக்கிறார். இதன்பின், தனது சொந்த ஊருக்கு சென்று தன்னுடைய மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கக்கூடிய விஷயங்களை செய்யவேண்டும் என்று முடிவு செய்து சொந்த ஊருக்கு செல்லும் சரவணன், அங்கு தனது தாத்தா உருவாக்கிய கல்லூரியை எடுத்து நடத்துகிறார்.
அந்த சமையத்தில் தனது பள்ளி பருவ நண்பரான ரோபோ ஷங்கரை சந்திக்கும் சரவணனுக்கு தனது நண்பனின் மனைவி மட்டுமல்லாமல், அவர்களுக்கு பிறந்த இரு பிள்ளைகளுக்கும் பிறப்பில் இருந்தே சக்கரை வியாதி இருப்பது தெரிய வருகிறது. சக்கரை வியாதியால் தினம்தினம் அவதிப்பட்டு வரும் ரோபோ ஷங்கர், தீடீரென ஒரு நாள் மரணமடைய, இதனால், அதிர்ச்சியடைகிறார் சரவணன்.
இந்த நோய்க்கான தீர்வை கண்டுபிடித்து இனி பிறக்கும் எந்த உயிருக்கும் சக்கரை வியாதி இருக்க கூடாது என்று முடிவெடுத்து தீவீர முயற்சியில் ஈடுபடுகிறது. இந்த முயற்சியில் சரவணன் வெற்றி கண்டாரா? இல்லையா? அவருக்கு வந்த தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறி சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
அறிமுக படத்திலேயே மக்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார் சரவணன் அருள். ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்திலும் தனது முயற்சியை நூறு சதவீதம் கொடுத்துள்ளார். கதாநாயகியாக வரும் கீத்திகா திவாரி நடிப்பு ஓகே. நகைச்சுவையால் மக்களை கவருகிறார் மறைந்த நடிகர் விவேக்.
பாலிவுட் நடிகை Urvashi Rautela-வின் நடிப்பு சொல்லும் அளவிற்கு இல்லை. வில்லனாக வரும் சுமன் வழக்கம் போல் கமெர்ஷியல் கதைக்கு ஏற்ப வில்லத்தனத்தை காட்டியுள்ளார். ரோபோ ஷங்கர் தனித்துநிற்கிறார். சரவணனின் அண்ணனாக வரும் நடிகர் பிரபு அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இடைவேளைக்கு பின் வந்தாலும் கவனத்தை பெற்றுவிட்டார் யோகி பாபு. மற்றபடி விஜயகுமார், நாசர், சிங்கம்புலி, அஸ்வத், லதா என அனைவரின் நடிப்பும் ஓகே.
இயக்குனர்கள் ஜெடி - ஜெரியின் இயக்கம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. நன்றாக நகரும் திரைக்கதையில் தேவையில்லாத பாடல்கள், சலிப்பு ஏற்படுத்தும் காட்சிகள் என பல சொதப்பல்கள். ஹாரிஸ் ஜெயராஜின் ஒரு சில பாடல்கள் மனதை தொடுகிறது. பின்னணி இசை பக்கா. ரூபனின் எடிட்டிங் ஒர்கவுட் ஆகவில்லை. ஆர். வேல்ராஜின் ஒளிப்பதிவு மற்றும் அனல் அரசின் சண்டை படத்திற்கு பலம்..
க்ளாப்ஸ்
கதைக்களம்
ஒளிப்பதிவு
திரைக்கதையில் விறுவிறுப்பு
பல்ப்ஸ்
படத்தின் நீளம் குறைத்து இருக்கலாம்
இயக்கம் கவனம் செலுத்தி இருக்கலாம்
லெஜண்ட் அண்ணாச்சிக்காகவே ஒரு தடவை விசிட் அடிக்கலாம்
AK61 அஜித்துக்கு வில்லன் இவரா? யாருமே எதிர்பார்க்காத ஒரு முக்கிய நடிகர்