'தி ஒடிசி' உலகளவில் 900 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான 'தி ஒடிசி' திரைப்படம் உலகளவில் 17 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.
தி ஒடிசி
உலகப்புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன், இவரது இயக்கத்தில் Interstellar, Inception, The Dark Knight, Dunkirk என பல ஆகச்சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் 'தி ஒடிசி'. இப்படத்தில் டாம் ஹொலண்ட், மேட் டாமன், Anne Hathaway, ஜென்டயா ஆகியோர் நடித்துள்ளனர்.
வசூல்
பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இந்நிலையில், 250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான 'தி ஒடிசி' 17 நாட்களில் உலகளவில் 911 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ. 8,600 கோடிக்கும் மேல் ஆகும்.