The Odyssey திரை விமர்சனம்

Report

கிறிஸ்டோபர் நோலன் இந்த பெயருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ப்ராண்ட் உள்ளது, படம் என்னமோ நான் நோலன் படம் பார்க்கிறேன் என்ற அளவிற்கு பல கோடி ரசிகர்களை கொண்ட நோலன் முதன் முறையாக ஒரு வராலாற்று கதையை கையில் எடுக்க, எப்போதும் போல் அவருக்கு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.

The Odyssey திரை விமர்சனம் | The Odyssey Movie Review

கதைகளம்

3000 வருடத்திற்கு முன்பு நடந்ததாக எழுதப்பட்ட கிரேக்க நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த ஒடிசி என்ன கதை என்றால் 10 வருடங்களாக நடந்த ட்ரோஜர் வார் பிறகு ஒடிசி(மேட் டேமன்) தன் குழுவுடன் தங்களுடைய நாட்டிற்கு திரும்புகிறார்.

அப்படி அவர் தன் நாட்டிற்கு செல்லும் வழியில் பல இன்னல்கள் அவரை நோக்கி வருகிறது, அந்த இன்னல்கள் ஒவ்வொன்றில் இருந்தும் ஒடிசி தப்பிக்கிறார்.

The Odyssey திரை விமர்சனம் | The Odyssey Movie Review

அதே நேரத்தில் ஒடிசி நாட்டில் ராஜாங்கத்தில் பல சர்ச்சைகள் நிகழ, இனி மன்னன் வரமாட்டார் நாம் ராஜ்ஜியத்தை பிடித்து விடலாம் என பலர் போட்டி போட, ஒடிசி மீண்டும் வருவார் என மகன், மனைவி என அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்த தருணத்தில் தன் பயணத்தில் ஒடிசி சந்திக்கும் பிரச்சனைகளை கடந்து பல வருடங்கள் ஓட, ஒடிசி தன் சொந்த நாட்டை வந்து அடைந்தாரா என்பதே இதன் மீதிக்கதை.

The Odyssey திரை விமர்சனம் | The Odyssey Movie Review

படத்தை பற்றிய அலசல்

மேட் டேமன் ஒடிசி-யாக வாழ்ந்துள்ளார், ஹாலிவுட்டில் பேமஸ் காமெடி மீம் ஒன்று மேட் டேமனை காப்பாற்றவும், சொந்த ஊருக்கு கொண்டு செல்லவுமே பல மில்லியன் டாலர்கள் செலவு செய்கிறார்கள் என்று, அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு கதை தான் ஒடிசியும்.

இதிலும் இவர் தன் சொந்த நாட்டிற்கு திரும்பினாரா என்பதே கதையாக கொண்டு அந்த மீம்-யை மீண்டும் ரீகிரியட் செய்துள்ளனர். நோலன் எப்போதும் சாதரண கதைகளை கூட தன் அசாதாரண திரைக்கதை மூலம் ஆடியன்ஸை மிரட்டுபவர், அந்த வகையில் இந்த ஒடிசி-ல் ஒரு பேண்டசி வரலாற்று கதையை தனக்கே உரிய ஸ்டைலில் ரியாலிட்டியாகவும் பிரமாண்டமகாவும் காட்டியுள்ளார்.

The Odyssey திரை விமர்சனம் | The Odyssey Movie Review

இந்த படம் தொடங்கும் முன்பு நோலன் தேர்ந்தெடுத்த நடிகர்கள் மீது மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது, ஒரு கிரேக்க நடிகர்கள் கூட இல்லை, ஹெலன், அக்கலீக்ஸ் கதாபாத்திரம் குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும் நோலன் தன் மீதுள்ள நம்பிக்கையில் கடைசி வரை போரடி எல்லோரும் பேச்சுக்கும் பதிலடியாக சிறந்த படைப்பை தான் தந்துள்ளார்.

ஒடிசி எப்படி ட்ரோஜர் போர் முடிந்து வீட்டிற்கு வந்தான் என்பதை நேரடியாக சொல்லாமல் நோலன் தனக்கே உரிய பாணியில் நான் லீனியராக சொன்ன விதம் அருமை, அதிலும் ஒடிசி மகன் கதை கேட்பது, சூனியகாரியிடம் மாட்டியிருக்கும் ஒடிசி நினைவுகள் என கதைகளை கொண்டு சென்றது சுவாரஸ்யம்

The Odyssey திரை விமர்சனம் | The Odyssey Movie Review

அன்பே டயானா திரை விமர்சனம்

அன்பே டயானா திரை விமர்சனம்

அதே நேரத்தில் ஒடிசி திரும்பும் போது பல கடவுள்கள் அதாவது கடல், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற கடவுள்களின் சாபம், தன் போர் வீரர்களை அவனாலேயே இழக்க நேரிடுவது போன்று காட்டியுள்ளனர்.

அதிலும் கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியாக உள்ளது என்பது போல் ஒடிசி ஒரு கரை ஒதுங்கினாலே குறைந்தது 20 வீரர்கள் இறந்துவிடுகிறார்கள், அப்படி ஆபத்து சூழ்கிறது.

The Odyssey திரை விமர்சனம் | The Odyssey Movie Review

போர் முடிந்து முதல் கரை ஒதுங்குமிடத்தில் மாமிசம் சாப்பிடும் கடலின் மகன், பிறகு 20 அடி வளர்ந்த வீரர்கள், மனிதர்களை விலங்காக மாற்றும் பெண், சூனியக்காரி என ஒவ்வொன்றாக கதையை கொண்டு சென்றது நோலன் மேஜிக் தான், அதிலும் இதை இங்க காட்ட வேண்டும், அங்க காட்ட கூடாது என நோலன் திரைக்கதை என்றுமே நீங்க கிங் தான் சொல்ல வைக்கிறது.

படம் மெதுவாகவே ஆரம்பத்தில் நகர்கிறது, ஆங்காங்கே ஆபத்துகள் வரும் போது பதட்டம் ஆரம்பிக்கிறது, ஆனால் இது எல்லோருக்கும் ஒர்க் ஆகுமா என்றால் ட்ராய், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்று பரபரப்பான வார் மூவி கமர்ஷியல் ரசிகர்களின் பொறுமையை கண்டிப்பாக சோதிக்கும் தான், ஆனால், அவர்களையும் கடைசி 45 நிமிடம் ரோலஸ் கோஸ்டர் ரைட் போல் நோலன் கட்டிபோட்டுள்ளார்.

The Odyssey திரை விமர்சனம் | The Odyssey Movie Review

டெக்னிக்கலாக படம் மிக வலுவாகவே உள்ளது, ஒளிப்பதிவு பின்னணி இசை, எடிட்டிங் எல்லாமே பிரமாதம், அதிலும் மனிதனை பன்றியாக மாற்றும் ஒரு காட்சி சிஜி பிரமிப்பு தான்.

க்ளாப்ஸ்

படத்தின் நடித்த அனைவரின் பங்களிப்பும்

திரைக்கதை

ஒடிசிக்கு வரும் ஆபத்துக்கள், அதை கடக்கும் காட்சிகள்

டெக்னிக்கல் ஒர்க், கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

கொஞ்சம் மெதுவாக நகரும் காட்சிகள், அதுவும் பொறுமையை சோதிக்கும் கமர்ஷியல் சினிமா விரும்பிகளுக்கு.

மொத்தத்தில் இந்த தி ஒடிசி கிறிஸ்டோபர் நோலன் திரைப்பயணத்தில் கடந்து வரும் மற்றொரு காவியம்.  

The Odyssey திரை விமர்சனம் | The Odyssey Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US