பாக்ஸ் ஆபிஸ்: 20 நாட்களில் 'தி ஒடிசி' உலகளவில் செய்துள்ள வசூல்..
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'தி ஒடிசி' திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
'தி ஒடிசி'
உலகப்புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'தி ஒடிசி'. இப்படத்தில் மேட் டேமன், Anne Hathaway, டாம் ஹோலண்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.

ட்ரோஜன் போருக்குப் பிறகு, இத்தாக்காவின் (Ithaca) கிரேக்க மன்னரான ஒடிஸியஸ் பல ஆபத்தான தடைகளை கடந்து, தனது சொந்த நாட்டிற்கு திரும்பவும், தன் மனைவியான பெனிலோப்பை சந்திக்கவும் மேற்கொள்ளும் நீண்ட பயணத்தை மையமாக வைத்துத்தான் இப்படம் உருவாகியுள்ளது.

வசூல்
250 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. கொஞ்சம் கூட அந்த எதிர்பார்ப்பை இப்படம் ஏமாற்றத்திற்கு அருகே எடுத்து செல்லவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 20 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் 'தி ஒடிசி' திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 9000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும் ரூ. 205 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.