குக் வித் கோமாளி 2 Final நிகழ்ச்சியில் யார் யார் Pairing தெரியுமா?- செம கூட்டணி பா
தொலைக்காட்சி என்று எடுத்தாலே மக்கள் முதலில் சீரியல்கள் பற்றி தான் யோசிப்பார்கள். ஆனால் இப்போது கதையே வேறு, குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தான் இப்போது அதிகம் பிரபலம்.
ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நிகழ்ச்சிக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளார்கள். எந்த அளவிற்கு என்றால் இந்நிகழ்ச்சி வேறு மொழியான கன்னடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த செய்திகள் எல்லாம் அண்மையில் பார்த்தோம். இப்படி மக்கள் கடந்த சில மாதங்களாக கொண்டாடிய குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது.
நிகழ்ச்சியை முடித்த போட்டியாளர்கள் படப்பிடிப்பு முடிந்தும் வீட்டிற்கு யாரும் செல்லவில்லையாம். நிகழ்ச்சி முடிந்துவிட்டதே என சோகத்தில் இருந்துள்ளனர்.
அண்மையில் இறுதி நிகழ்ச்சியின் புரொமோ எல்லாம் வந்தது, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் எஸ்டிஆர் சிறப்பு விருந்தினராக வந்து கலக்கியுள்ளார்.