சூப்பர் சிங்கர் 8ல் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நபர்.. சோகத்தில் சூப்பர் சிங்கர் செட்
ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று சூப்பர் சிங்கர்.
இதில் தற்போது ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் விறுவிறுப்பாக கடந்த மூன்று வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
சென்ற வாரம் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 2 போட்டியாளர்கள் டேங்கர் கட்டத்திற்கு சென்றனர்.
இதில் இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் யார் ஒருவர் மக்களின் வாக்குகள் மூலம் காப்பாற்றப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர்.
இந்நிலையில் இதில் ஜாக்லின் எனும் போட்டியாளர் மக்களின் வாக்குகள் அதிகம் பெற்று காப்பாற்றப்பட்டார்.
ஆனால் குறைந்த வாக்குகள் பெற்ற சுஷ்மிதா எனும் போட்டியாளர் கண்ணீருடன் சூப்பர் சிங்கர் செட்டில் இருந்து வெளியேறினார்.