தி பெட் டிடெக்டிவ்: திரை விமர்சனம்
ஷரஃப் யு தீன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியாகியுள்ள 'தி பெட் டிடெக்டிவ்' மலையாளப் படத்தின் விமர்சனத்தைப் பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
மெக்சிகோவில் பிரைவேட் டிடெக்டிவ் ஆக வேலைபார்த்த ரெஞ்சி பனிக்கர், மாபியா டானை புகைப்படம் எடுக்கும்போது அவரது கண்ணில் சிக்கிவிடுகிறார். அதன் பின்னர் 2008ஆம் ஆண்டில் கேரளாவுக்கு திரும்பி செட்டில் ஆகி விடுகிறார்.
அவரது மகன் டோனி ஜோஸ் அலூலா (ஷரஃப் யு தீன்) லோக்கல் பிரைவேட் டிடெக்டிக் ஏஜென்சியை நடத்தி வருகிறார். பெரிய கேஸை பிடித்தால்தான் நமது ஏஜென்சி வளரும் என அவர் காத்திருக்கும்போது, ரூ.30 கோடி மதிப்பிலான மீன்கள் ஒரு சிறுமியுடன் சேர்த்து கடத்தப்படுகிறது.
இதில் டோனி ஜோஸிற்கும் சம்பந்தம் உள்ளது என்று சந்தேகிக்கிறார் அவருடன் ஒன்றாக படித்தவரும், போலீசுமான ரஜத் மேனன் (வினய் போர்ட்). இது ஒருபுறமிருக்க சில கும்பல்கள் தனித்தனியாக அந்த மீன்களை தேடுகிறார்கள்.
அவர்களிடம் தனது காதலி கைகேயியுடன் சிக்கும் டோனி ஜோஸ், எப்படி தப்பித்தார்? மாயமான மீன்களையும், சிறுமியையும் அவர் கண்டுபிடித்தாரா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
மெக்சிகோவில் தொடங்கும் கதை கேரளாவிற்கு வர, நாய்க்குட்டியை கண்டுபிடித்ததால் பெட் டிடெக்டிவ் என்ற பெயரை பெறுகிறார் டோனி எனும் ஷரஃப். தன் அப்பாவுக்கு தானும் பெரிய டிடெக்வ்தான் என்று நிரூபிக்க விலையுயர்ந்த மீன்களை கண்டுபிடிக்க அவர் போராடும் காட்சிகள் எல்லாம் அதகளம்.
இப்படி ஒரு கதை நகர, மறுபுறம் ஒரு சைக்கோ கொலைகாரனை நோக்கி கதை நகர்கிறது. ஆனாலும் அதனை கனெடிக்ட் செய்த விதம் அருமை. டெக்னிக்கல் விஷங்களை ஆங்காங்கே பயன்படுத்துவதன் மூலம் படத்திற்கு நல்ல ரிச் லுக் கிடைத்துள்ளது.
கைகேயி எனும் பாத்திரத்தில் வரும் அனுபமா முடிந்த அளவிற்கு கதைக்கு வலுசேர்க்க உதவியிருக்கிறார். ஆனால் படம் முழுக்க ஸ்கோர் செய்வது என்னவோ ஷரஃப்தான். படக்களம் படத்தில் எப்படி அசத்தினாரோ அதை விட ஒரு படிமேலே அட்டகாசம் செய்துள்ளார்.
குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். தமிழ் நடிகர் முத்துக்குமார் தனக்கே உரித்தான பாடிலேங்குவேஜில் மிரட்ட, மனைவியின் சொல்லு ஏற்ப வேலைகளை செய்து பரிதாபப்பட வைக்கிறார் விஜயராகவன்.
சுந்தர்.சி படங்களில் வருவதைப் போல், விலையுயர்ந்த மீன்களை கண்டுபிடிக்கும் போட்டியில் பலர் அடித்துக்கொள்ளும திரைக்கதையை, சுவாரஸ்யமாக கொண்டுசெல்கிறார் இயக்குநர் பிரனீஷ் விஜயன்.
படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கச்சிதமான பங்களிப்பை கொடுக்க, முழுப்பாடத்திலும் காமெடிக்கு பஞ்சமில்லை. எதிர்பாராத ட்விஸ்ட்கள் மிரள வைக்கின்றன.
க்ளாப்ஸ்
திரைக்கதை
காமெடி காட்சிகள்
ஆக்ஷன் காட்சிகள்
கிளைமேக்ஸ் ட்விஸ்ட்ஸ்
பல்ப்ஸ்
ஏகப்பட்ட கதாபாத்திரங்களை கொண்டுவந்ததால் யார் யாருடைய ஆள் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.