முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவருவது மிகவும் சகஜமான விஷயம் தான். இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே விஜய்யின் வாரிசு - அஜித்தின் துணிவு ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியானது மோதிக்கொண்டது.
லியோ
அதை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்துடன், பாலகிருஷ்ணாவின் பகவந் கேசரி, சிவராஜ்குமாரின் கோஷ்ட், டைகர் ஷெராப்பின் கணபத் ஆகிய படங்கள் வெளிவந்தது.
இதில் லியோ படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை நாம் அறிவோம். அதே போல் பாலகிருஷ்ணாவின் பகவந் கேசரி மற்றும் சிவராஜ்குமாரின் கோஷ்ட் ஆகிய படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
100 கோடி நஷ்டம்
ஆனால், ஹிந்தியில் வெளிவந்த டைகர் ஷெராப்பின் கணபத் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆம், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
கணபத் படத்தின் மொத்த வசூல் மட்டுமே ரூ. 17 கோடி வரை தான் என்கின்றனர். ஆனால் தமிழில் இருந்து ஹிந்தியில் டப் செய்து வெளிவந்த லியோ, பாலிவுட்டில் மட்டுமே ரூ. 38 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.