ஊரையே திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்! பரபரப்பாக்கிய செயல்! சரியான பதிலடி கொடுத்த ரசிகர்கள்!
விஜய் சினிமாவின் தற்போது உச்சத்தில் இருக்கிறார். பாக்ஸ் ஆஃபிஸில் அவரின் படங்கள் பெரும் வசூல் சாதனை படைக்கின்றன. வசூல் மன்னனாகவும் இருக்கின்றார். அவரின் மீதான அரசியல் பார்வை பல காலமாகவே இருந்து வந்தது. ஆனால் அமைதியாக இருந்து வந்தவர் அண்மையில் தன் அப்பா சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்தது அவரின் குடும்ப பிரச்சனையாக மாறியது.
விஜய் இதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரசிகர்கள் யாரும் அக்கட்சியில் இணைய வேண்டாம், தன் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிரடியாக கூறிவிட்டார்.
அண்மையில் சீமான் விஜய் அரசியலுக்கு வருகையை எதிர்த்து தரக்குறைவாக விமர்சித்ததால் விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பானார்கள்.
ரஜினியும் உடல் நிலை காரணங்களால் அரசியலிலிருந்து விலகிவிட்டார், இந்நிலையில் சீமான் மீது கடுப்பிலிருந்த விஜய் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டி சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.