உண்மையான பிக்பாஸ் இவர் தான் தனது சொந்த குரலில் பேசி வெளியிட்ட வீடியோ, யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று கடந்த 17 தேதி முடிவடைந்தது, அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.
அவருக்கு அடுத்து பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோராஜ் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர், ஆரிக்கு பரிசு தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பிக்பாஸின் கம்பிரமான குரலுக்கு யார் சொந்தக்காரர் என ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பர்த்து வந்தனர்.
மேலும் அவரின் பெயர் கோபி நாயர் என்றும் இவர் தான் பிக்பாஸின் குரலுக்கு சொந்தக்காரர் என அவரின் புகைப்படம் ட்ரெண்டானது.
இதனிடையே தற்போது கோபி நாயர் தனது சொந்தக்குரலில் பேசி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Finally The Voice Of #BiggBoss ??? pic.twitter.com/vGrkrWimA2
— shobana (@shobana40502466) January 27, 2021