வேட்டையன் டிரெய்லர் இதுபோன்று வர நான் தான் காரணம்.. ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஞானவேல்
வேட்டையன்
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
அப்பட வெற்றியை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள திரைப்படம் வேட்டையன், ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10, அதாவது நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது.
இப்படம், ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளிவந்தது. இதில், ரசிகர்கள் மத்தியில் டீசர் நல்ல வரவேற்பை பெற்ற அளவிற்கு கூட இந்த படத்தின் டிரெய்லர் பெறவில்லை.
ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர்
இதுகுறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்து இயக்குனர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், "அனிருத் 'ஹண்டர் வண்டார்' பாடலுடன் டிரெய்லர் கட்ஸ் கொடுக்க வந்தார். அப்போது நான் தான் அவரிடம் ஒரு படத்திற்கு முக்கியம் அந்த படத்தின் கதை தான். அதற்காக நாம் மக்களை தயார் செய்ய வேண்டும்.
சூப்பர் ஸ்டார் என்பதை தாண்டி அந்த படத்தின் கதைக்காக மக்கள் வர வேண்டும். அதனால் இது போன்று டிரெய்லர் இருக்க வேண்டும் என்று கூறினேன்" என தெரிவித்துள்ளார்.