இயக்குனர் ஹரியின் சரிவிற்கு காரணம் இது தான்! முதன் முறையாக போட்டுடைத்த பிரபலம்..
தமிழ் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஹரி.
இதன்பின் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான சாமி திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து அருள், ஐயா, தாமிரபரணி, வேல், சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்கள் ஹரியை முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக மாற்றியது.
ஆனால் சில வருடங்களாக ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார் இயக்குனர் ஹரி.
இந்நிலையில் இயக்குனர் ஹரியின் திரையுலக சரிவை குறித்து பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் பேசியுள்ளார்.
இதில் " ஹரி போலீஸ் படங்களின் மூலம் எவ்வளவு பெரிய புகழை பெற்றாரோ அதே அளவு போலீஸ் படங்களின் மூலம் விமர்சனங்களையும் சந்தித்துள்ளார் என்பதும் மறுக்க முடியாத ஒன்று.
மேலும் " வேங்கை, சிங்கம் 3, சாமி 2 உள்ளிட்ட திரைப்படங்கள் மட்டும் ஹரியின் சரிவிற்கு காரணம் கிடையாது, அதுவும் ஒரு காரணம் " என்று கூறியுள்ளார்.