பிக்பாஸ் சீசன் 5-ல் இந்த முறை நுழைவுள்ள மிகவும் மூத்த நடிகர், யார் தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இந்த ஒரு நிகழ்ச்சி ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது, இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார்.
மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கவுள்ளதால் இப்போதே இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து அறிய ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் பிரபல நடிகரான எம்.எஸ்.பாஸ்கரை அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதற்கு முன் நடந்த சீசன்களில் அனந்த் வைத்யநாதன், பொன்னம்பலம், மோகன் வைத்யா, சுரேஷ் சக்ரவர்த்தி போன்ற பல சீனியர்கள் கலந்து கொண்டது போல, எம்.எஸ்.பாஸ்கர் இதில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.