ஜாக்கி ஜான் சம்பவம் The Shadow's Edge திரை விமர்சனம்
ஜாக்கி ஜான் இந்த பெயரை தெரியாத சினிமா ரசிகர்கள் உலகத்தில் யாருமில்லை, அதிலும் 90ஸ் கிட் ஆக நீங்கள் இருந்தால் உங்கள் ஆதர்ஸ நாயகனாக கண்டிப்பாக ஜாக்கி இருப்பார், அப்படிப்பட்ட ஜாக்கியை பல வருடமாக நம் திரையில் ஒரு நல்ல படத்திற்காக காத்திருக்க அவர்கள் அனைவருக்கும் விருந்தாகவே வந்துள்ளது இந்த ஷேடோ'ஸ் எட்ஜ்.

கதைக்களம்
சிட்டியில் திடிரென்று 4 இளைஞர்கள் கும்பலாக வந்து ஒரு பேங்-யை சூரையாடிக்கொண்டு போலிஸிடமிருந்து தப்பித்து செல்கின்றனர்.
எவ்ளோ முயற்சி செய்தும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இவர்களுக்கு மாஸ்டர் மைண்ட் ஆக இருப்பது டோனி லிங் என்பவர்.

இந்நிலையில் இவர்களை எப்படியாவது பிடிக்க வேண்டும் என ஜாக்கி-யின் உதவியை நாடுகிறது தற்போது உள்ள போலிஸ் குழு.
இதை தொடர்ந்து போலிஸுடன் ஜாக்கி ஒரு டீம், திருடர்களுடன் டோனி லிங் ஒரு டீம், இவர்களிம் ஆடு புலி ஆட்டமே இந்த தி ஷேடோ'ஸ் எட்ஜ்.
படத்தை பற்றி அலசல்
படத்தில் ஜாக்கி தானே ஹீரோ அவரை விடுங்கள், ஜாக்கி ஜான் தாண்டி படத்தின் வில்லனாக வரும் டோனி லிங் எல்லோரையும் தூக்கி சாப்பிடுகிறார். படம் முழுவதும் மிரட்டல் பெர்ப்பாமன்ஸ் தான்.
அதிலும் தான் உருவாக்கியவர்கள் தன்னையே சுத்து போடுகின்றனர் என தெரிந்து, அவர் ஆடும் ஆட்டம் இந்த வருடத்தில் பெஸ்ட் நெகட்டிவ் கதாபாத்திரம் இவருக்கு தான் எல்லா விருதும் கிடைக்க வேண்டும்.
ஜாக்கி ஜான் படம் என்றாலே அதிரடி சாகசம் தான், ஆனால், ஜாக்கி வயது கருத்தில் கொண்டு சண்டைக்காட்சிகளை குறைத்து, திரைக்கதையில் வேகத்தை கூட்டியுள்ளார் இயக்குனர் லேரி யாங்.

அப்படியும் இரண்டு இளைஞர்களுடன் கையில் இரும்பு கம்பியுடன் போடும் சண்டை, கிளைமேக்ஸ் வில்லன் டோனி லெங்-வுடன் குறுகிய ரூமில் போடும் சண்டை என சிறு விருந்து வைத்துள்ளனர் ஜாக்கி ஜான் ரசிகர்களுக்கு.
இந்த மாதிரி படம் என்றாலே டெக்னாலாஜி நிறைய பயன்படுத்த வேண்டும், அதனால் பல டெக்னாலஜிகளை இதில் காட்டி பிரமிக்க வைத்துள்ளனர், அதிலும் வில்லன் வீட்டிற்கு ஜாக்கி மற்றும் அவருடைய மகள் ஸ்தானத்தில் உள்ள பெண் இருவரும் சோதனை போடும் இடமெல்லாம் டைட்டில் ஏற்றது போல் எட்ஜ் ஆப் தி சீட் தான்.
படத்தில் கவனிக்க வேண்டிய கதாபாத்திரம் ஹீரோயின் ஸாங் கதாபாத்திரம், இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பெண் எவ்ளோ தைரியமாக இருக்க வேண்டும் என்று அவர் கதாபாத்திரத்தின் வாயிலாக காட்டியுள்ளனர்.

டெக்னிக்கால இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் டாப் க்ளாஸ் தான், என்ன வில்லன் ஒரு கட்டத்திற்கு மேல் உள்ள எதோ சூப்பர் ஹிரோ போல் 100 பேர் வந்தாலும் கத்தியை வைத்து கொல்வது என்பது நம்ம ஊர் படங்களை மிஞ்சுக் லாஜிக் மீறல்கள்.
க்ளாப்ஸ்
வில்லன் நடிகர் டோனி லெங் நடிப்பு
ஜாக்கி ஜான் மற்றும் படத்தின் நாயகி ஸாங்.
திரைக்கதை, டெக்னிக்கல் ஒர்க்
பல்ப்ஸ்
சில லாஜிக் மீறல்கள்.
மொத்தத்தில் வேகவேகமாக விறுவிறுப்பாக ஒரு படம் பார்க்க வேண்டுமா, உங்களுக்கானது தான் இந்த The Shadow's Edge.
