The Smashing Machine திரை விமர்சனம்
டுவைன் ஜான்சன் நடிப்பில் பயோபிக் ஸ்போர்ட்ஸ் படமாக ஹாலிவுட்டில் வெளியாகியுள்ள The Smashing Machine திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.

கதைக்களம்
அமெரிக்காவில் பிரபல மல்யுத்த (Wrestling) மற்றும் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரராக இருப்பவர் மார்க் கெர்.
இவர் தனது காதலி டான் ஸ்டேபிள்ஸ் உடன் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். ஆனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட, அது மார்க்கின் கேரியரை பாதிக்கிறது.

இதன் காரணமாக வலிநிவாரணி மருந்து அதிகம் எடுக்கும் மார்க், போட்டிகளில் தோல்விகளை சந்திக்கிறார்.
அதன் பின்னர் வலிநிவாரண போதையில் இருந்து அவர் மீண்டு வந்து கேரியரில் வெற்றி பெற்றாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
Wrestling, Mixed marital arts மல்யுத்த விளையாட்டில் 1997 முதல் 2000 வரை பிரபலமாக விளங்கிய மார்க் கெர்ரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் படமாக எடுத்துள்ளார் இயக்குநர் பென்னி சாஃப்டி.
மார்க் கெர் கேரக்டரில் நடிகரும், முன்னாள் மல்யுத்த வீரருமான டுவைன் ஜான்சன் அட்டகாசம் செய்துள்ளார். சண்டைகளை விட எமோஷனலாக பிளே செய்யும் காட்சிகள்தான் அதிகம்; அவற்றில் டுவைன் ஜான்சன் நடித்துள்ள விதம் இவருக்கு இந்த அளவுக்கு நடிப்பு வருமா என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

காதலிடம் புரிய வைக்க முடியாமல் கதவை உடைப்பது, பின் அவர் கட்டியணைத்ததும் சாந்தமாவது என தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு ஈடுகொடுத்து காதலியாக எமிலி பிளண்ட் சிறப்பாக நடித்துள்ளார். காதலனின் வலியை உணர்ந்து அழுகிறார்.
ஆனால் தன்னுடைய சந்தோஷம் முக்கியம் என்று கூச்சலிடுகிறார். இவ்வாறாக வெரியேசன் காட்டுகிறார். பயோபிக் படம் என்பதற்கு ஏற்ப திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும் காட்சிகளின் ஊடே படத்துடன் ஒன்ற முடிகிறது.

டுவைன் ஜான்சனுக்கு ஆறுதல் கூறி தேற்றுவதுடன் தன்னுடைய கெரியரில் வெற்றி பெறும் பாஸ் ரட்டனின் கேரக்டரும் அருமை. ஒளிப்பதிவு 90களின் பிற்பகுதியை கண்முன் நிறுத்துகிறது.
பின்னணி இசை திரைக்கதைக்கு வலுசேர்க்கிறது. வழக்கமாக வெற்றி கதைகளையே பயோபிக் படமாக பார்த்தவர்களுக்கு இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை தரும்.

க்ளாப்ஸ்
டுவைன் ஜான்சனின் நடிப்பு, அர்ப்பணிப்பு
நேர்த்தியான திரைக்கதை
கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் டாக்சிக் காதலினால் மல்யுத்த வீரனும் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவான் என்பதை அழகாக காட்டியிருக்கிறது இந்த Smashing machine. கண்டிப்பாக திரையரங்கில் பார்க்கக்கூடிய படம்.

போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri