7 வருடம் வெற்றிகரமாக சன் டிவியில் ஓடிய சூப்பர்ஹிட் சீரியல் மீண்டும் வருகிறது - அதுவும் இந்த முன்னணி நடிகர் நடித்ததா
சின்னத்திரையில் சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிய சீரியலை மீண்டும் தற்போது ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
ஆம் சமீபத்தில் கூட வாணி போஜன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலை கலைஞர் தொலைக்காட்சி தற்போது மீண்டும் முதலிருந்து ஒளிபரப்பு செய்கிறது.
அந்த வரிசையில் தற்போது சன் டிவியில் 7 வருடங்கள் மக்களின் பேராதரவோடு ஓடிவந்த பிரபல சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஆம் சன் தொலைக்காட்சியில் குமரன் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்த திருமதி செல்வன் சீரியல் மீண்டும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
ஆம் சின்னத்திரையின் முன்னணி நடிகர் சஞ்சீவ், மற்றும் சேது பட புகழ் அபிதா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் திருமதி செல்வம்.