குக் வித் கோமாளி பைனல்ஸுக்கு வந்த தமிழ் சினிமாவின் டாப் நடிகர், யாருக்கு விருது கொடுத்துள்ளார் பாருங்க
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சூட் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனல்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது, இதன் ஒளிபரப்பு அடுத்த வாரம் ஏப்ரல் 14 ஆம் தேதி என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பைனல்ஸ்க்கு பாபா பாஸ்கர், அஸ்வின், ஷகீலா, கனி, பவித்ரா என ஐந்து போட்டியாளர்கள் தேர்வாகி இருந்தனர். மேலும் இதில் கனி வின்னர் என்றும் அவருக்கு அடுத்தடுத்த இடத்தை ஷகீலா மற்றும் அஸ்வின் பிடித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த பைனல்ஸ் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சிம்பு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கியுள்ளார். ஆம், தற்போது சிம்பு கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி அதில் சிம்பு அஸ்வினுக்கு விருது கொடுப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அஸ்வின் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் என்பது குறிப்படத்தக்கது.