தி வில்லேஜ் திரைவிமர்சனம்
கடந்த 2022ல் இருந்து தமிழ் சினிமாவில் வெப் தொடர்களின் ராஜ்ஜியம் துவங்கியது. விலங்கு, சூழல், அயலி, வதந்தி, குயின் உள்ளிட்ட பல வெப் தொடர்கள் வெளிவந்தது.
அன்று துவங்கி தற்போது வரை தமிழில் நல்லநல்ல வெப் தொடர்கள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இன்று [24.22. அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ள வெப் தொடர் தான் தி வில்லேஜ்.
மிலந் ராவ் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார். இந்த வெப் தொடர் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்
மருத்துவராக இருக்கும் ஆர்யா தனது குடும்பத்துடன் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார். அப்போது கட்டியல் என்ற கிராமத்தில் கார் பிரேக் டவுன் ஆகிறது.
இதன்பின் தனது மனைவி மற்றும் குழந்தையை காரில் இருக்க சொல்லிவிட்டு ஊருக்குள் சென்று யாரையாவது உதவிக்கு அழைக்க செல்கிறார் ஆர்யா.
திரும்பி வந்து பார்க்கும்போது ஆர்யாவின் மனைவி, குழந்தை மற்றும் காரையும் காணவில்லை. இதன்பின் என்ன நடந்தது? இதற்கெல்லம் காரணம் என்ன என்பதே தி வில்லேஜ் வெப் தொடரின் கதை.
வெப் தொடரின் நிறை/குறை
வெப் தொடர் பற்றிய அலசல் முதல் எபிசோட் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக அமைத்திருந்தார் இயக்குனர்.
ஆனால், அதை அடுத்தடுத்து எபிசோடில் கொண்டு செல்லாததே இந்த வெப் தொடருக்கு பெரிய மைனஸ். 2,3,4 எபிசோட்கள் சற்று தொய்வு தான். ஆனால் 5வது எபிசோட் பட்டைய கிளப்பிவிட்டது.
மீண்டும் விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் சென்ற 5வது எபிசோட் நம்மை வியப்பில் ஆழ்த்தினாலும், 6வது எபிசோடில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லை.
நல்ல கதைக்களம் ஆனால் இன்னும் கூட திரைக்கதை வலுவாக இருந்து இருந்தால் இந்த வெப் தொடர் வேற லெவலில் இருந்திருக்கும்.
நடிகர்களின் நடிப்பு ஓகே. குறிப்பாக ஆடுகளம் நரேனின் மகளாக நடித்திருவரின் நடிப்பு பாராட்டுக்குரியது. இந்த வெப் தொடரின் மிகப்பெரிய மைனஸ் என்னவென்றால் பிளாஷ் பேக் போர்ஷன் மற்றும் மேக்கப் தான்.
இந்த வெப் தொடரின் மொத்த ரன் டைம் மட்டுமே 4 மணி நேரம் 15 நிமிடம் ஆகும். 2,3,4 மற்றும் 6வது எபிசோட்கள் சற்று தொய்வாக இருந்தாலும் கூட கண்டிப்பாக பார்க்க கூடிய ஒரு முக்கிய தமிழ் வெப் தொடராக தான் தி வில்லேஜ் அமைந்துள்ளது.