தனது தந்தை எஸ்.ஏ.சியை வெறுத்து ஒதுக்கும் தளபதி விஜய்.. தந்தையின் மேல் கடும் கோபத்தில் செய்த விஷயம்..
நடிகர் விஜய்யின் பெயரின் சமீபத்தில் ஒரு காட்சியை துவங்க போவதாக அறிவித்திருந்தார் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
ஆனால் தனக்கும் அந்த கட்சிக்கும், சம்மந்தமில்லை என்றும், தனது ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டார் விஜய்.
இதன்பின் அந்த கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவிடப்படவில்லை. ஆனால் இரு தினங்களுக்கு முன் தனது பெயரில் கட்சி ஒன்றை துவங்கினார் எஸ்.ஏ.சி.
இந்த கட்சி குறித்து பேசிய எஸ்.ஏ.சி " இந்த கட்சிக்காக நான் விஜய்யை கிறித்துமஸ் தினத்தன்று நேரில் சந்தித்தேன், அவர் எனக்கு மோதிரம் போட்டுவிட்டார் " என கூறியிருந்தார்.
ஆனால் கிறித்துமஸ் பண்டிகை அன்று விஜய் வெளிநாட்டில் இருந்தாராம். அதுமட்டுமின்றி, நடிகர் விஜய்யை எஸ்.ஏ. சி சந்திக்கவே இல்லையாம்.
இதற்கும் மேலாக தனது தந்தையின் மேல் கொண்டுள்ள வெறுப்பால், எஸ்.ஏ. சந்திரசேகரின் போன் நம்பரை பிளாக் செய்து வைத்துருக்கிறாராம் நடிகர் விஜய்.
இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.