இந்த முறையும் சொதப்பினாரா இயக்குநர் லிங்குசாமி ! தி வாரியர் திரைப்படத்தின் முதல் வசூல் எவ்வளவு தெரியுமா?
தி வாரியர் முதல் நாள் காலெக்ஷன்
இயக்குநர் லிங்குசாமி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர், அதன்படி அவர் இயக்க வெளியான திரைப்படங்கள் பல பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளன.
அந்த வகையில் அவரின் அனந்தம் திரைப்படம் தொடங்கி ரன், சண்டக்கோழி, பீமா, பையா உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியான முக்கிய கமர்சியல் திரைப்படங்களாக பார்க்கப்படுகிறது.
அப்படியான இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான அஞ்சான், சண்டக்கோழி 2 உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் திரைப்படங்கள் இயக்குவதில் கொஞ்சம் கேப் எடுத்துக்கொண்டார் லிங்குசாமி.
மேலும் 4 வருடங்கள் கழித்து இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் தான் தி வாரியர், நடிகர் ராம் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படம் நேற்று வெளியானதில் இருந்து அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் தற்போது தி வாரியர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ,12.20 கோடியை வசூல் செய்திருக்கிறது, மேலும் ரூ. 8.02 கோடியை ஷேர் எடுத்துள்ளது.

விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செல்ல விரும்பும் பாலிவுட் நடிகை! யார் தெரியுமா