அச்சு அசல் அனிருத் பாடலை காப்பியடித்த தமன்.. வாரிசு 'தீ தளபதி' பாடலை வெச்சு செய்யும் ரசிகர்கள்

By Kathick Dec 05, 2022 03:00 AM GMT
Report

வாரிசு தீ தளபதி பாடல்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்குகிறார். இப்படத்தின் முதல் பாடம் ரஞ்சிதமே சில வாரங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அச்சு அசல் அனிருத் பாடலை காப்பியடித்த தமன்.. வாரிசு

இதை தொடர்ந்து சிம்புவின் குரலில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் அடுத்த பாடலான தீ தளபதி நேற்று மாலை வெளிவந்தது. ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருந்த இப்பாடல் தற்போது சர்ச்சையிலும் சிக்கியுள்ளது.

காப்பியடித்த தமன்

அது என்னவென்றால், இந்த பாடல் காப்பியடித்து போடப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

அனிருத் இசையில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற 'வரவா வரவா' பாடலை காப்பியடித்து தீ தளபதி இசையமைக்கப்பட்டுள்ளது என்று கூறி வருகிறது.

அதே போல் கன்னட திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலையும், நான் ஈ படத்தில் வரும் 'ஈ டா ஈ டா' பாடலையும் சேர்ந்த கலவை தான் தீ தளபதி என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US