சீரியல் நடிகர் ராஜ்கமல் - லதா ராவ் ஜோடி வீட்டில் நடந்த கொள்ளை! கதவை உடைத்து திருட்டு
ராஜ்கமல் - லதா ராவ்
சின்னத்திரை மட்டுமின்றி பல படங்களிலும் நடித்து பிரபலமாக இருப்பவர்கள் ராஜ்கமல் மற்றும் லதா ராவ். நட்சத்திர ஜோடியாக வலம் வரும் அவர்களுக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கின்றனர்.
இந்த ஜோடி சென்னையில் மிக பிரம்மாண்டமாக ஒரு பங்களா கட்டி அதை ஷூட்டிங் வாடகைக்கு வழங்கி வருகின்றனர். ஒரே வீட்டில் பல செட் இருப்பது போன்று வடிவமைத்து இருக்கும் அந்த வீட்டின் வீடியோ சமீபத்தில் இணையத்திலும் வைரலாகி இருந்தது..
திருட்டு
தற்போது லதா ராவ் மற்றும் ராஜ்கமலுக்கு சொந்தமான வீட்டில் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் நுழைந்து விலையுயர்ந்த பொருட்களை திருடி சென்று இருக்கின்றனர். பெரிய டிவி மற்றும் மோட்டார் உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போயிருப்பதாக போலீசில் அவர்கள் புகார் அளித்து இருக்கின்றனர்.
இது பற்றி தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் கார்த்தியின் 10 வயது மகளா இது? இப்படி வளர்ந்துவிட்டாரே