ரசிகர்களை வியக்க வைக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் குழுவினர்- அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

By Yathrika Jun 20, 2023 02:00 PM GMT
Report

தென்றல் வந்து என்னைத் தொடும்

விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Star Jalsa தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Khelaghor என்ற சீரியலின் ரீமேக்காக இது ஒளிபரப்பாகிறது.

2021ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் தற்போது 600 எபிசோடுகளை கடந்துள்ளது.

ரசிகர்களை வியக்க வைக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் குழுவினர்- அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா? | Thendral Vandhu Ennai Thodum Serial Shooting Spot

அடுத்தகட்ட படப்பிடிப்பு

நாம் பார்த்து பழகிய கதை என்றாலும் இந்த தொடர் குழுவினரிடம் ஒரு வித்தியாசம் உள்ளது. அதாவது கதைக்காக நாம் எதிர்ப்பார்க்காத இடங்களில் எல்லாம் சென்று படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.

முதலில் ஒரு மலை, பிறகு நடுகடல் என படப்பிடிப்பு நடத்திய இந்த தொடர் குழுவினர் இப்போது ராஜஸ்தான் சென்றுள்ளனர்.

அங்கு பாலைவனத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள், படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதில் நாயகனாக நடிக்கும் வினோத் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

ஜீ தமிழின் சரிகமப சீசன் 3 ரசிகர்களுக்கு வந்த சூப்பரான செய்தி- கொண்டாட்டத்திற்கு தயாரா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US