விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தை அப்படியே காபி அடித்த விஜய் டிவி சீரியல்
பொதுவாகவே தற்போது வரும் பல சீரியல்களில் முன்பு ஹிட் ஆன படங்களின் கதை அல்லது காட்சிகளை எடுத்து அப்படியே பயன்படுத்துகிறார்கள். அதற்காக கடும் ட்ரோல்களையும் பல சீரியல்கள் சந்தித்து இருக்கின்றன.
அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ட்ரோல்களை சந்தித்து வருகிறது.
துள்ளாத மனமும் துள்ளும் பட காப்பியா?
தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஹீரோ ஜெயிலுக்கு சென்றுவிட்டு பல வருடங்கள் கழித்து வெளியில் வருவது போலவும், அதே நேரத்தில் ஹீரோயின் படித்து காலெக்டர் ஆகிவிட்டது போலவும் காட்டப்பட்டு இருக்கிறது.
இந்த கதை அப்படியே விஜய் - சிம்ரன் நடித்து சூப்பர்ஹிட் ஆன துள்ளாத மனமும் துள்ளும் பட கதையின் காபி என நெட்டிசன்கள் தற்போது விமர்சித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் ஆயிஷாவின் காதலர் இவர்தான்! போட்டோ வெளியாகி வைரல்