தெறி ரீ-ரிலீஸ்.. முன்பதிவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? ரொம்ப கம்மி
தெறி
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் தெறி. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும், நடிகை மீனாவின் மகள் நைனிகா இப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 2016ல் வெளிவந்த தெறி படம் உலகளவில் ரூ. 150+ கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது.

ரீ-ரிலீஸ்
ஜனவரி 9ஆம் தேதி விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகாத காரணத்தினால், அதன்பின் தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டார். ஆனால், அப்போது வெளிவரவிருந்த புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், இப்போது தெறி ரீ-ரிலீஸ் ஆனால் எங்களுடைய படங்களின் வசூலுக்கு பாதிப்பு ஏற்படும் என கேட்டுக்கொண்டதால் ரீ-ரிலீஸை தள்ளிவைத்ததாக தயாரிப்பாளர் தாணு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

ஆனால், இன்று தெறி படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. கடந்த வாரம் கில்லி ரீ-ரிலீஸை தொடர்ந்து இந்த வாரம் தெறி ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது என்பது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். இந்த நிலையில், இதுவரை நடந்துள்ள முன்பதிவில் இப்படம் ரூ. 20+ லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. இது விஜய்யின் படத்திற்கு மிகவும் குறைவாகும். பொறுத்திருந்து பார்ப்போம் வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்று.
