பாக்ஸ் ஆபிஸில் தள்ளாடும் தெறி ரீ-ரிலீஸ்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
ரீ-ரிலீஸ்
விஜய் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படங்களை சமீபகாலமாக ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். கில்லி, சச்சின் போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை கில்லி படைத்துள்ளது. அந்த வரிசையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படம் தான்.

விஜய்யின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று தெறி. இப்படத்தின் மூலம் முதல் முறையாக அட்லீ - விஜய் கூட்டணி அமைத்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மெர்சல், பிகில் என தொடர் வெற்றிகளை கொடுத்தனர்.
வசூல்
கடந்த வாரம் தெறி படம் ரீ-ரிலீஸ் ஆன நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், பாக்ஸ் ஆபிஸில் மிகவும் குறைவான வசூல் வந்துள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்களில் தெறி ரீ-ரிலீஸ் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் மூன்று நாட்களில் ரூ. 1.2 கோடி மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளது. இது மிகவும் குறைவான வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri