காதலியை அறிமுகம் செய்த தெருக்குரல் அறிவு! போட்டோவுடன் இதோ
பாடகர் தெருக்குரல் அறிவு என்ஜாய் எஞ்சாமி உள்ளிட்ட பல ஆல்பம் பாடல்கள் மூலமாக புகழ் பெற்றவர்.
சில மாதங்களுக்கு முன் ஒரு சர்ச்சைக்காக அதிகம் பேசப்பட்டார். என்ஜாய் எஞ்சாமி பற்றிய பாடல் சர்ச்சை தான் அது. அந்த பாடல் பற்றிய விஷயங்களில் அவர் ஒதுக்கப்படுவதாகவும், சந்தோஷ் நாராயணன் மற்றும் மகள் தீ தான் என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு சொந்தம் கொண்டாடுவதாகவும் பேசப்பட்டது.
இரு தரப்பும் மாறி மாறி இந்த விவகாரம் பற்றி அறிக்கை வெளியிட்டு சர்ச்சையை பெரிதாக்கினார்கள். மேலும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் அந்த பாடலை பாட தீ மட்டுமே வந்திருந்தார், தெருக்குரல் அறிவு அழைக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
காதலியை அறிமுகப்படுத்திய தெருக்குரல் அறிவு
இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க தற்போது தெருக்குரல் அறிவு தனது காதலியை அறிமுகம் செய்து இருக்கிறார்.
"For miles together.. We are the wildest love of our ancestors.. கல்பனா - என் திமிரான தமிழச்சி" என அறிவு குறிப்பிட்டு இருக்கிறார்.
கல்பனா பா.ரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
