தான் நடித்ததில் அஜித்துக்கு பிடித்த படங்கள் இவைதான்.. லிஸ்ட் இதோ
அஜித்
நடிகர் அஜித்துக்கு அறிமுகமே தேவையில்லை. இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் அஜித் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களை கொடுத்துள்ளார்.
இதில் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், குட் பேட் அக்லி மாபெரும் அளவில் வசூலில் வரவேற்பை பெற்று சாதனை படைத்துள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படம் இன்று வரை கொண்டாடி வருகிறார்கள்.
அஜித்துக்கு பிடித்த படங்கள்
நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பின் நடிகர் அஜித் Interview கொடுத்துள்ளார். இந்த Interview-ல் பேசிய அஜித் தனது சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
இதில், தான் இதுவரை நடித்து திரைப்படங்களில் தனக்கு பிடித்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பேசினார். அப்போது, வாலி, வரலாறு, மங்காத்தா, பில்லா ஆகிய திரைப்படங்கள் தனக்கு பிடிக்கும் என கூறினார்.

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
