சித்தி 2 சீரியலில் இத்தனை முன்னணி நடிகைகள் வரப்போகிறார்களா?- வெளிவந்த புரொமோ
நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் படங்களில் நடிப்பதை தாண்டி சீரியல்களிலும் பெரிய ஈடுபாடு காட்டி வருகிறார்.
ராடான் என்ற தனது நிறுவனம் மூலம் சீரியல்கள் தயாரிப்பதும், அதில் நடிப்பதும் என பிஸியாக உள்ளார். இப்போது அவர் சித்தி 2ம் பாகத்தில் நடித்து வருகிறார்.
நேற்று இவர் தனது டுவிட்டரில் ஒரு குட்டி வீடியோ வெளியிட்டார். அதில் சரண்யா பொன்வண்ணன், சுஹாசினி, ஊர்வசி, ராதிகா என 4 பேரும் ஒரு விஷயம் நடக்கப்போகிறது, 100 % உறுதி என பேசுகிறார்கள், ஆனால் என்ன விஷயம் என தெளிவாக தெரியவில்லை.
சித்தி 2 சீரியலில் இந்த நாயகிகள் ஸ்பெஷல் ரோலில் நடிக்க வருகிறார்களோ என பேசப்படுகிறது. ஏனெனில் ராதிகா அந்த வீடியோவில் சீரியல் லுக்கில் இருக்கிறார்.
இப்படி அந்த வீடியோ குறித்து ஒவ்வொரு கருத்துக்கள் வருகிறது, என்ன தான் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
என்ன நடக்குது ???waiting pic.twitter.com/z5zPJh2XHq
— Radikaa Sarathkumar (@realradikaa) January 6, 2021