மருதமலை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அர்ஜுன் இல்லை.. இந்த இரண்டு டாப் ஹீரோஸ் தான்
மருதமலை
அர்ஜுன் நடிப்பில் சுராஜ் மற்றும் வேணு ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மருதமலை.
இப்படத்தில் வடிவேலு, மீரா சோப்ரா, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அர்ஜுன் கிடையாதாம்.
நிராகரித்த டாப் ஹீரோஸ்
வேறு யார் தெரியுமா, இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோஸாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் தானாம். முதலில் இந்த கதை அஜித்திடம் தான் சென்றுள்ளதாம். அவர் நிராகரித்த பின் இந்த கதையை விஜய்யிடம் கூறியுள்ளனர்.
இருவரும் இந்த கதையில் நடிக்கவில்லை என்பதன்பின் இப்படத்தின் கதையை கேட்ட ஆக்ஷன் கிங் அர்ஜுன் மருதமலை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் தற்போது விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கார்த்திக்கின் முதல் மனைவியின் அழகிய புகைப்படம்- கௌதம் கார்த்திக் ஷேர் செய்த போட்டோ