மார்ச் இறுதிக்குள் இவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவேண்டும்: ஜோ பைடன் உத்தரவு
அமெரிக்காவில் மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என ஜோ பைடன் ஒவ்வொரு மாகாணத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ள நிலையில், அனைத்து ஆசிரியர்கள், குழந்தை பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து மாகாணங்களுக்கும் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
மார்ச் மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் அவர்களின் முதல் டோஸை பெற்றிருக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
30 க்கும் மேற்பட்ட மாகாணங்கள் ஏற்கனவே கல்வியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளித்துள்ளன. ஜனாதிபதி இப்போது மீதமுள்ள மாகாணங்களுக்கு இதைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Pre-K முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து ஆசிரியர்களுக்கும் federal pharmacy vaccination programme-ன் கீழ் அடுத்த வாரத்திலிருந்து தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
