தனுஷின் பிறந்தநாள் அன்று காத்திருக்கும் மாபெரும் சர்ப்ரைஸ்.. செம ட்ரீட்
நடிகர் தனுஷ்
சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மாறன் படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடவுள்ள இருக்கும் திரைப்படம், திருச்சிற்றம்பலம்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
