திருச்சிற்றம்பலம் படத்தின் வெளியான படப்பிடிப்பு புகைப்படம்.. தனுஷ் யாருடன் இருக்கிறார் தெரியுமா
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த மாறன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை அடுத்து தற்போது மித்ரன் ஜவஹார் இயக்கி வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நடிகைகள், கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இப்படத்தின் நடன காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நடனத்தை திரையுலகில் பிரபலமான ஜனி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
அப்போது தனுஷுடன் ஜனி மாஸ்டர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..