தனுஷ் திரைப்பயணத்திலேயே புதிய மைல்கல்- திருச்சிற்றம்பலம் வசூலில் செய்த சாதனை
திருச்சிற்றம்பலம்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடித்திருந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
இந்த திரைப்படத்தில் தனுஷை தாண்டி நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரியா பவானி ஷங்கர் என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத்-தனுஷ் கூட்டணி பட இசையும் அமைந்தது.
பல வருடங்களுக்கு பிறகு தனுஷை திரையில் பார்ப்பதால் ரசிகர்கள் பெரிய அளவில் படத்தை கொண்டாடினார்கள்.
பட பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாராகி கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி வெளியான இத்திரைப்படம் இப்போது வசூலில் பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை வசூல் செய்துள்ளதாம்.
தனுஷின் திரைப்பயணத்திலேயே ரூ. 100 கோடி வசூலித்த முதல் திரைப்படம் இதுதானாம்.
6 நாள் முடிவில் தமிழகத்தில் விக்ரமின் கோப்ரா செய்த வசூல்- லாபமா, நஷ்டமா?

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
