விவாகரத்தாகி 3 வருடம் ஆச்சு.. புது காதலரை அறிமுகப்படுத்திய நடிகைக்கு வந்த மோசமான கேள்வி
மகராசி, வாணி ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருப்பவர் நிவேதிதா பங்கஜ். சுந்தரி சீரியலிலும் அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
அவர் இதற்கு முன் மகராசி சீரியல் நடிகர் SS ஆர்யன் எனபவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்கு பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போது திருமகள் சீரியலில் நிவேதிதா உடன் நடிக்கும் சுரேந்தர் என்பவர் உடன் காதலில் விழுந்திருக்கிறார்.
அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு சமீபத்தில் நிவேதிதா காதலை அறிவித்து இருந்தார்.
விவாகரத்து ஆகி 3 வருஷமாச்சு
இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும் மோசமான கேள்விகளை கேட்டதால் தற்போது நிவேதிதா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
"எனக்கு விவகாரத்தாகி மூன்று வருடம் ஆகிவிட்டது. எனக்கு புது காதல் கிடைத்து இருக்கிறது, எனக்கு ஸ்பெஷல் ஆன ஒருவருடன் இனி வாழ போகிறேன்."
"புரிந்துகொண்டு, மதிப்பளியுங்கள். மோசமான கேள்விகள் கேட்க வேண்டாம்" என நிவேதிதா குறிப்பிட்டு இருக்கிறார்.




